ஜியோ மற்றும் Vi போஸ்ட்பெய்ட் திட்டம்
ப்ரீபெய்ட் திட்டங்களுடன், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல அற்புதமான போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் பயனர்களுக்கு வழங்குகின்றன. நீங்கள் போஸ்ட்பெய்டு பயனராக இருந்தால் அல்லது ப்ரீபெய்டில் இருந்து போஸ்ட்பெய்டுக்கு மாற விரும்பினால், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) ஆகியவற்றின் மலிவான போஸ்ட்பெய்டு திட்டங்களைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மலிவு விலை போஸ்ட்பெய்ட் திட்டங்கள் முழு குடும்பத்திற்கும் சிறந்தது. இவற்றில், பேம்லி பிளானில் நீங்கள் ஒரு இணைப்பு பெற்றால் வீட்டில் இருக்கும் மூன்று கூடுதலாக கொடுக்கப்படும் மூன்று பேம்லி சிம்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
100 ஜிபி டேட்டா இலவசம்
அதிக இணையம் தேவைப்படுபவராக இருந்தால் 100 ஜிபி வரை டேட்டா கொடுக்கும் திட்டங்கள் இருக்கின்றன. தகுதியுள்ள பயனர்களுக்கு ஜியோவின் அன்லிமிடெட்ட் 5G டேட்டாவையும் பெறுவீர்கள். அதாவது ஜியோவின் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யும்போது இன்னும் கூடுதல் பலனை பெறுவீர்கள். அதேசமயம், வோடபோன்-ஐடியா திட்டத்தில், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற டேட்டாவின் பலனைப் பெறுவீர்கள்.
ஜியோவின் ரூ.699 திட்டம்
ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டம் 3 கூடுதல் பேம்லி சிம்களுடன் வருகிறது. நிறுவனம் இந்த திட்டத்தில் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு 100 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தகுதியான பயனர்கள் திட்டத்துடன் வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறுவார்கள். குடும்ப சிம்மிற்கான இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 5 ஜிபி கூடுதல் டேட்டாவையும் நிறுவனம் வழங்குகிறது. தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கும் இந்த திட்டத்தில், வரம்பற்ற அழைப்பும் கிடைக்கும். திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் Netflix Basic, Amazon Prime, Jio TV மற்றும் Jio Cinema ஆகியவற்றுக்கான இலவச சந்தாவும் உண்டு.
வோடபோன்-ஐடியாவின் ரூ.601 திட்டம்
நிறுவனத்தின் இந்த திட்டம் (Vi Max Family) 2 கூடுதல் சிம்களுடன் வருகிறது. இணையத்தைப் பயன்படுத்த, இந்த திட்டத்தில் முதன்மை பயனருக்கு 70 ஜிபி டேட்டாவையும், கூடுதல் குடும்ப உறுப்பினர்களுக்கு 40 ஜிபி டேட்டாவையும் நிறுவனம் வழங்குகிறது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை திட்டத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டம் 200 ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் நன்மையுடன் வருகிறது. இந்தத் திட்டத்தின் பயனர்கள் தங்களுக்குள் 10 ஜிபி வரை டேட்டாவைப் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. இதில், அனைத்து உறுப்பினர்களுக்கும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில், நிறுவனம் 6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்குகிறது. இது தவிர, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லிவ் ஆகியவற்றின் இலவச சந்தாவும் இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் Vi Movies & TV பயன்பாட்டிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது.
மேலும் படிக்க | கார் டயரில் இதை கவனிச்சா உடனே மாத்துங்க... மைல்லேஜ் கிடைக்காது, ஆபத்தும் அதிகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR