Jio Cinema: ஜியோ போட்ட மெகா கூட்டணி...கலக்கத்தில் பிரபல ஓடிடி நிறுவனங்கள்

ஜியோ சினிமா இப்போது உலக சினிமா நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்திருப்பதால், உலக புகழ் பெற்ற வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் இன்னும் குறுகிய காலத்தில் இந்த ஒரு செயலிலேயே பார்த்துக் கொள்ளலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 30, 2023, 07:34 AM IST
Jio Cinema: ஜியோ போட்ட மெகா கூட்டணி...கலக்கத்தில் பிரபல ஓடிடி நிறுவனங்கள் title=

ஜியோவின் மெகா பிளான் 

ஜியோ நிறுவனம் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. தொலைத்தொடர்பு சார்ந்த அனைத்திலும் கால் பதிக்கும் ஜியோ நிறுவனம் அடுத்ததாக சினிமா துறையில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதாவது உலகம் முழுவதும் இருக்கும் பிரபல சினிமா ஒளிபரப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, இந்தியாவில் ஜியோ சினிமா வழியாக ஒளிபரப்ப அனைத்து காய்களையும் நகர்த்த தொடங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாகவே ஜியோ சினிமாவில் ஐபிஎல் ஒளிபரப்பை இலவசமாக கொடுத்து, அனைத்து வாடிக்கையாளர்களையும் கவரத் தொடங்கிவிட்டது.

ஜியோ சினிமா சந்தா

ஐபிஎல் முடிவடைந்தவுடன் ஜியோ சினிமா செயலிக்கு சந்தாவை நிர்ணயிக்கவும் ஜியோ திட்டமிட்டிருக்கிறது. அதன்பிறகு WB நிறுவனத்துடன் இணைந்து HBO Max Originals மூலம் பல அதிரடியான DC மற்றும் ஹாரி பாட்டர் போன்ற திரைப்படங்கள் மற்றும் உலக புகழ் பெற்ற Game of thrones வெப் சீரிஸ் போன்றவற்றை திரையிடவுள்ளது. Game of Thrones வெப் சீரிஸ் உலக புகழ் பெற்ற ஒரு இணைய தொடர். இது முடியும் வரை உலகமே இதை பற்றி பேசிக்கொண்டிருந்தது. அந்த அளவிற்கு பிரமாண்டமும் கதைக்களமும் இதில் இருந்தது. இதனை HBO நிறுவனம் தயாரித்து Netflix மூலம் தொகுத்து வழங்கியது. இந்தியாவில் Disney+Hotstar நிறுவனத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. 

மேலும் படிக்க | SBI குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை பயன்படுத்துவது எப்படி? இதோ வழிமுறை

ஜியோவின் புதிய கூட்டணி

கடந்த மார்ச் 31 வரை அதன் உரிமை இருந்தது. இப்போது அது காலக்கெடு நிறைவடைந்ததை அடுத்து Viacom18 நிறுவனத்தின் ஜியோ சினிமாவிற்கு அதன் ஒளிபரப்பு உரிமையை வழங்கியுள்ளது. இதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் HBO உரிமையாளரான Warner Bros நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இனி Warner Bros குழுமம் தயாரிக்கும் அனைத்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் Jio Cinema மூலம் ஒளிபரப்பப்படும்.

பிரபல ஓடிடி நிறுவனங்கள் கலக்கம்

Warner Bros குழுமம் ஹாலிவுட் திரைப்படங்களை நேரடியாக தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் பிரபல சூப்பர் ஹீரோ திரைப்படங்களாக DCயின் Batman, Superman, Wonder Woman, Harry Potter திரைப்படங்கள், 300 பருத்தி வீரர்கள், King Kong, Godzilla போன்ற மிகப்பெரிய திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ஆகும். சொல்லப்போனால் Marvel Disney நிறுவனங்களுக்கு நேரடி போட்டி நிறுவனமாக இருப்பது Warner Bros நிறுவனம் ஆகும். இவ்வாறு Jio Cinema வருகையால் இந்தியாவில் ஏற்கனவே முன்னணி OTT நிறுவனங்களாக இருக்கும் Disney+Hotstar, Netflix, Amazon Prime போன்ற நிறுவனங்கள் கதிகலங்கி போயுள்ளன. இதுவரை சீராக இருந்த இந்திய OTT துறை ஜியோ வருகையால் இனி அசுர வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | Lava Blaze 1X 5G: சீன போன்களை ஓரங்கட்ட வருகிறது மிக மலிவான இந்திய 5ஜி ஸ்மார்ட்போன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News