வீட்டில் இருக்கும் ஏசியை செலவில்லாமல் சுத்தம் செய்ய டிப்ஸ்!

ac cleaning tips : ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், அதில் தூசி மற்றும் அழுக்கு படிந்து, அதன் செயல்திறனை பாதிக்கும். தூசி மற்றும் அழுக்கு ஏசியின் குளிரூட்டும் திறனைக் குறைத்து மின் நுகர்வை அதிகரிக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2024, 10:29 AM IST
  • ஏசி கிளினீங் செலவில்லாமல் செய்வது எப்படி?
  • ஒரு பைசா கூட கொடுக்காமல் வீட்டில் சுத்தம் செய்யலாம்
  • 2 மாதங்களுக்கு ஒருமுறை ஏசியை சுத்தம் செய்யுங்கள்
வீட்டில் இருக்கும் ஏசியை செலவில்லாமல் சுத்தம் செய்ய டிப்ஸ்!  title=

ஏசி கிளீனிங் டிப்ஸ்

நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் துவங்கி கோடை சீசன் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில், பெரும்பாலான மக்கள் வெப்பத்தைத் தவிர்க்க ஏசி பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான வீடுகளில் இந்தக் காலத்தில் ஏ.சி இருக்கிறது. ஆனால், ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், அதில் தூசி மற்றும் அழுக்கு படிந்து, அதன் செயல்திறனை பாதிக்கும். தூசி மற்றும் அழுக்கு ஏசியின் குளிரூட்டும் திறனைக் குறைத்து மின் நுகர்வை அதிகரிக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், ஏசியை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானது. ஏசியை தவறாமல் சுத்தம் செய்வதன் மூலம், அது நன்றாக வேலை செய்யும். ஆனால், பலருக்கு ஏசியை சுத்தம் செய்யத் தெரியாது. இவர்கள் ஏசியை சுத்தம் செய்ய ஒரு டெக்னீஷியனை அழைக்க வேண்டியிருக்கும். இதனால் அவர்களுக்கு பணம் செலவாகிறது. ஆனால், வீட்டிலேயே ஏசியை நீங்களே செலவில்லாமல் சுத்தம் செய்யலாம். வீட்டில் ஏசியை எப்படி சுத்தம் செய்வது என்று தெரியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். அதற்கான டிப்ஸ் இங்கே இருக்கிறது.

வீட்டில் ஏசியை எப்படி சுத்தம் செய்வது

1. மின்சாரத்தை அணைக்கவும்

முதலில் ஏசியை அணைத்துவிட்டு பவர் ஸ்விட்சை அணைக்கவும். மின்சாரம் இருக்கும்போது ஏசியை சுத்தம் செய்யக்கூடாது என்பதால் இது முக்கியமானது. இதனால் ஏசியில் பாதிப்பு ஏற்படலாம்.

2. ஏர் பில்டரை அகற்றவும்

அதன் பிறகு ஏசி ஃபில்டரை சுத்தம் செய்யவும். ஏசியின் முன் பேனலைத் திறந்து ஏர் ஃபில்டரை வெளியே எடுக்கவும். ஏர் பில்டரை சுத்தம் செய்ய, நீங்கள் ஒரு vacuum cleaner பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் அதை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவலாம்.

3. cooling fins சுத்தம் செய்யவும்

காற்று வடிகட்டியின் பின்னால் cooling fins -கள் இருக்கும். அவற்றை சுத்தம் செய்வதும் மிக அவசியம். cooling fins -களை சுத்தம் செய்ய நீங்கள் brush or vacuum cleaner பயன்படுத்தலாம்.

4. பில்டர் பைப் சுத்தம்

ஏசியின் பில்டர் பைப்பை சுத்தம் செய்வது முக்கியம், ஏனெனில் இது ஏசியிலிருந்து தண்ணீரை எடுக்க உதவுகிறது. வடிகால் குழாயை சுத்தம் செய்ய கம்பி அல்லது பைப் கிளீனரைப் பயன்படுத்தலாம்.

5. ஏசியை மீண்டும் இணைக்கவும்

ஏசியின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்தவுடன், அவற்றை ஒவ்வொன்றாக மீண்டும் நிறுவவும்.

இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

* 2-3 வாரங்களுக்கு ஒருமுறை ஏசியை சுத்தம் செய்யவும்.
* ஏசியை சுத்தம் செய்ய எப்போதும் லேசான சோப்பு பயன்படுத்தவும்.
* ஏசியை சுத்தம் செய்ய ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம்.

ஏசியை சுத்தம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

* ஏசியை தொடர்ந்து சுத்தம் செய்வது அதன் செயல்திறனை மேம்படுத்துகிறது.
* இது மின்சார உபயோகத்தை குறைக்கிறது.
* ஏசியை அவ்வப்போது சுத்தம் செய்வது அதன் ஆயுளை அதிகரிப்பதுடன் நன்றாக வேலை செய்யும்.

மேலும் படிக்க | குறைந்த EMI மூலம் கார் வாங்கணுமா... இந்த 5 மாடல்கள் ஈஸியாக கிடைக்கும் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News