WhatsApp Update: பிரத்யேகமான ஸ்டிக்கரை வாட்ஸ்அப்பில் உருவாக்க சுலப வழி

பயனர்கள் தங்களுக்குத் தேவையான சொந்த ஸ்டிக்கர்களை இணையம் அல்லது டெஸ்க்டாப் பயன்படுத்தி உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2021, 08:24 AM IST
  • WhatsAppல் நீங்களே புதிய ஸ்டிக்கரை உருவாக்கலாம்
  • உங்களுக்கான தனிப்பட்ட ஸ்டிக்கர் வேண்டுமா?
  • டெஸ்க்டாப் மூலமும் உருவாக்கலாம்
WhatsApp Update: பிரத்யேகமான ஸ்டிக்கரை வாட்ஸ்அப்பில் உருவாக்க சுலப வழி   title=

புதுடெல்லி: METAவுக்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், இணையம் அல்லது டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் வாடிக்கையாளர் ஸ்டிக்கர்களை உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் ஸ்டிக்கர் சந்தையை அணுகலாம்.  WhatsApp பயனர்கள் உரையாடல் பகுதிக்குச் சென்று, அங்குள்ள  அட்டாச் ( Attach) என்ற பகுதிக்குச் சென்று (paperclip icon)க்குள் சென்று அதன்பிறகு ஸ்டிக்கர் விருப்பத்தை (Sticker option) என்பதற்கு செல்லவும்.  

தனிப்பயன் ஸ்டிக்கரை உருவாக்க ஒரு புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். அந்தப் புகைப்படத்தை ஸ்டிக்கரில் மாற்றியமைக்கலாம். ஸ்டிக்கர்களை மிகவும் வேடிக்கையாக மாற்ற எமோஜிகள் அல்லது வார்த்தைகளைச் சேர்க்கவும் இந்த புதிய வாட்ஸ்அப் அம்சம் அனுமதிக்கிறது.

"ஸ்டிக்கர் மேக்கரைப் பயன்படுத்த, இணையம் அல்லது டெஸ்க்டாப்பிற்கான வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கவும், உரையாடல் பகுதியில் இணைப்புகள் ஐகானைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஸ்டிக்கர் ஐகானைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்து, நீங்கள் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி உங்கள் சொந்த மேஜிக் செய்யலாம்" என்று வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ | Password-ஐ ஹேக் செய்ய சில நொடிகள் போதும்...

இதற்கு முன்னதாக, உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், தனது இந்திய பயனர்களுக்காக இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியது - ‘ஃப்ளாஷ் அழைப்புகள்’ (Flash Calls) மற்றும் ‘செய்தி நிலை அறிக்கையிடல்’ (Message Level Reporting) என்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு அம்சங்களும், வாட்ஸ்அப் தளத்தை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தொடக்கத்தில், ஃப்ளாஷ் அழைப்புகள் அம்சமானது, ஆண்ட்ராய்டு பயனர்கள் (Android Phone users) தங்கள் ஃபோன் எண்களை SMSக்குப் பதிலாக தானியங்கி அழைப்பின் மூலம் சரிபார்க்க உதவுகிறது. தங்கள் மொபைல் எண்களை அடிக்கடி மாற்றுபவர்கள் புதிய சாதனத்தில் எளிதாகப் பதிவு செய்ய ஃப்ளாஷ் அழைப்புகள் உதவியாக இருக்கும்.

செய்தி நிலை அறிக்கையிடல் அம்சம் என்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் அம்சம், “வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட ஒரு குறிப்பிட்ட செய்தி தொடர்பாக புகாரளிக்க பயனர்களை அனுமதிக்கிறது. ஒரு பயனரைப் பற்றி புகாரளிக்க அல்லது தடுக்க ஒரு குறிப்பிட்ட செய்தியை நீண்ட நேரம் அழுத்தினால் போதும்” என்று ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.  

READ ALSO | ஆன்லைனில் பணம் செலுத்துபவரா? QR ஸ்கேன் செய்யும்போது Rs 50000 மோசடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News