அமேசானில் நாளை முதல் லெனோவா K8 நோட்!

Last Updated: Thursday, September 14, 2017 - 19:07
அமேசானில் நாளை முதல் லெனோவா K8 நோட்!

லெனோவா இந்தியா இன்று அறிவித்துள்ளது படி அதன் "K8 நோட்" -னை செப்டம்பர் 15 முதல் amazon.in இனையதளத்தினில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மொபைல் ஆனது 3GB + 32GB மாறுபாட்டு திறனுடன் ரூ .12,999 -க்கும் 4GB + 64GB மாறுபாட்டு திறனுடன் ரூ. 13,999 -க்கும் கிடைக்கும்.

மேலும் ஒரு சிறப்பு சலுகையாக, பயனர்கள் தங்கள் பழைய மொபைலினை புதிய லெனோவா `K8 நோட்` க்கு மாற்றிக்கொள்ளலாம், இந்த சலுகை மூலம் ரூபாய் 1,000 வரை கூடுதலாக தள்ளுபடி பெறலாம்.

சில சிறப்பம்சங்கள்:-

* 10-core செயலி
* 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு திறன்
* 13MP முதன்மை கேமிரா, 5MP சென்சார் திறன்

இச்சாதனம் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும்.