இ-சிம் வாடிக்கையாளர்களை குறி வைக்கும் ஹேக்கர்கள்! ஏன்? தப்பிப்பது எப்படி?

Mobile Hackers Now Targeting eSIM Users: ஹேக்கர்கள் இ-சிம் வாடிக்கையாளர்களை குறி வைக்க தொடங்கியுள்ளதால், அதில் இருந்து தப்பிப்பது எப்படி? எப்படி பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 19, 2024, 09:40 PM IST
  • இ -சிம் வாடிக்கையாளர்களுக்கு குறி
  • மொபைல் ஹேக்கர்களின் புது டெக்னிக்
  • பாதுகாப்பாக இருப்பது எப்படி தெரியுமா?
இ-சிம் வாடிக்கையாளர்களை குறி வைக்கும் ஹேக்கர்கள்! ஏன்? தப்பிப்பது எப்படி? title=

இ-சிம் வாடிக்கையாளர்களின் புரொபைல்களை குறிவைத்து தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை திருட ஹேக்கர்கள் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ரஷிய இணையப் பாதுகாப்புத் துறையான FACCT எச்சரிக்கை விடுத்துள்ளது. சிம் கார்டுகளைப் பயன்படுத்தி பல மோசடிகள் நடந்தாலும், ஹேக்கர்கள் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப தங்களது மோசடி முறைகளையும் மாற்றி வருகின்றனர். இ-சிம் கார்டு என்பது வழக்கமான சிம் கார்டுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் சிம் ஆகும். இதுபோன்ற சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் பயனர்களின் புரொபைல் விவரங்களை மோசடி செய்பவர்கள் ஹேக் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | நீண்ட நாள் கோரிக்கை.. விரைவில் WhatsApp புதிய அப்டேட்.. பயனர்கள் செம ஹேப்பி

ஹேக்கர்கள் க்யூஆர் குறியீட்டை மட்டும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் இ-சிம்மை உருவாக்கி, அதை பயன்படுத்தி மோசடி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் பெயர் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களைப் பெறும் ஹேக்கர்கள் அந்த தகவல்களைக் கொண்டு வாடிக்கையாளரைப் போலவே டெலிகாம் நிறுவனங்களை எளிதாகத் தொடர்புகொண்டு இ-சிம் உருவாக்கும் செயல்முறையை முடிக்கின்றன. ஏனென்றால் உங்களைப் பற்றி அடிப்படை தகவல்கள் அனைத்தும் அவர்களிடம் இருக்கிறதால், இதனை அவர்களால் எளிதாக செய்ய முடியும். தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த மோசடி குறித்து அறியாமல் இருக்கலாம். அதாவது அவர்களுக்கு மோசடியாளர்கள் தான் தொடர்பு கொள்கிறார்கள் என்ற சந்தேகமே வராது. 

இதன் மூலம், வாடிக்கையாளரின் எண்ணில் இ-சிம் உருவாக்கும் ஹேக்கர்கள், வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணை வைத்து வங்கிக் கணக்குகளை அணுக முடியும். பல செயலிகளில் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைக் கசியவிடலாம். இப்படியான ஆபத்து இ-சிம் பயன்படுத்துபவர்களை சூழ்ந்து கொண்டிருப்பதால் அவர்கள் மிகவும் கவனமுடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் நொடிப் பொழுதில் உங்கள் இ-சிம் மொபைல் எண்ணை வைத்து சமூகவிரோத குற்ற செயல்களில் அவர்களால் ஈடுபட முடியும். இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் எளிமையான வழியும் இருக்கிறது. 

சில நாடுகளில் இ-சிம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஐபோன் மாடல்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன்களைப் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் தகவலின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஃபோன்களில் இரண்டு காரணி அங்கீகாரத்தை (Enable two-factor authentication) இயக்குவதன் மூலம் அல்லது Authentication applications -களை பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பை உறுதிசெய்யலாம்.

மேலும் படிக்க | இந்தியாவில் சிறந்த மைலேஜ் கார்கள் ரூ. 10 லட்சத்தில்! மாருதி சுசுகி பலேனோ முதல் டாடா அல்ட்ராஸ் வரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News