இந்தியாவில் வெளியானது Nokia 3.2; விலை 8,990 ரூபாய் மட்டும்!

HMD Global நிறுவனத்தின் நோக்கிய மொபைல் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வரவான Nokia 3.2-னை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!

Last Updated : May 22, 2019, 01:42 PM IST
இந்தியாவில் வெளியானது Nokia 3.2; விலை 8,990 ரூபாய் மட்டும்! title=

HMD Global நிறுவனத்தின் நோக்கிய மொபைல் உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வரவான Nokia 3.2-னை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!

6.26" HD+ திரையுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் போன் சுமார் 2 மணி நேர பேட்டரி லைப் கொண்டது எனவும் நோக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு வேறுபாடுகளுடன் வரும் இந்த Nokia 3.2, இரு வேறு விலைகளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. அந்த வகையில் 2GB RAM+16GB உள் நினைவகம் கொண்ட மொபைலின் விலை Rs 8,990 எனவும், 3GB RAM+32GB உள் நினைவகம் கொண்ட மொபைலின் விலை Rs 10,790 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தானியங்கு நுன்னறிவு திறன் கொண்ட இந்த Nokia 3.2 ஆனது கூகிள் அசிஸ்டன்ட்., முகம் அறிந்து செல் பூட்டும் வசதி, கைரேகை பூட்டு போன்ற வசதிகளை கொண்டு வெளிவருகிறது என நோக்கிய நிறுவனத்தின் இந்தியா கிளைக்கான தலைவர் அஜய் மேத்தா தெரிவித்துள்ளார்.

Android 9 Pie இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்போன் Qualcomm Snapdragon 429 chipset பிராசசருடன் வெளியாகிறது.

மேலும் இந்த ஸ்மார்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 ஆண்டு கேரண்டியும் அளிக்கப்படும் என நோக்கியா அறிவித்துள்ளது.

தற்போது கருமை மற்றும் வெளிர் வெண்மை நிறங்களில் கிடைக்கும் இந்த Nokia 3.2 நாளை (மே 23) முதல் நோக்கியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News