சுதந்திர தினம்: கூகுள், யுடியூபில் பிரதமர் மோடியின் உரை நேரடி ஒளிபரப்பு!

நாளை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் உரை கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2018, 09:21 AM IST
சுதந்திர தினம்: கூகுள், யுடியூபில் பிரதமர் மோடியின் உரை நேரடி ஒளிபரப்பு! title=

நாளை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் உரை கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்திய சுதந்திர தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அப்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அவரின் இந்த உரையானது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்நிலையில் இன்று ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கொடுக்க இருக்கும் உரையை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த ஒளிபரப்பு கூகுளின் முகப்பு பக்கத்தில் இடம்பெறும். 

Trending News