கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், தற்போது மதியம் வெயில் சுட்டெரிக்கிறது. இன்னும் சில நாட்களில் அனல் காற்று வீசத் தொடங்கும். கோடையை சமாளிக்க ஏசி வாங்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். இந்நிலையில், ஏசியை போலவே குளிவிக்கும், சுவரில் பொருத்தக் கூடிய கூலர் மலிவான கிடைக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.
ஏசி போல தோற்றம் அளிக்கும், அதே போன்ற குளிர்ச்சியை தரும் கூலர் ஒன்று, மார்க்கெட்டில் வந்துள்ளது தெரியுமா? குறைந்த மின்சாரத்தில், இந்த கூலர் ஏசி போன்ற குளிர்ந்த காற்றைக் கொடுக்கும்.
மேலும் படிக்க | வெறும் 5 ஆயிரத்திற்கு Vivo 5G Smartphone வாங்க அறிய வாய்ப்பு
ஏசி போன்ற சுவரில் தொங்கும் இதுபோன்ற கூலர்கள் உலகிலேயே இதுதான் முதல் முறை சந்திக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பொனி கிளவுட் என்னும் இந்த கூலர் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம். மீண்டும் அடிக்கடி தண்ணீர் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. அதை பற்றி தெரிந்து கொள்வோம்...
சிம்பொனி கிளவுட் பெர்சனல் கூலரின் கொள்ளளவு 15 லிட்டர். அதாவது, 15 லிட்டர் தண்ணீர் தொட்டி உள்ளது. இது சுமார் 2000 சதுர அடி பரப்பளவு கொண்ட அறையை குளிர்விக்கிறது. இது மூன்று பக்க கூலிங் பேடுடன் வருகிறது. இது வெப்பமான கோடை காலத்திலும் வீட்டை குளிர்விக்கும். ஈரப்பதத்தை நீக்க, ஈரப்பதத்தை நீக்கும் அமைப்பு அதில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இனி இவற்றை ஆன்லைனிலேயே வாங்கலாம்
ரிமோட் உடன் கூடிய சிம்பொனி கிளவுட் பெர்சனல் கூலரின் தொடக்க விலை ரூ.14,999.ஆனால் இது பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.13,499க்கு கிடைக்கிறது. அதாவது, கூலருக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ.675 கேஷ்பேக் கிடைக்கும். அதாவது, கூலரை ரூ.12,824 என்ற விலைக்கு வாங்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR