கோவிட் தொற்றுநோய் காரணமாக, அலுவலக வேலைகள் வீட்டிலிருந்தே செய்யும், வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் பொதுவாகி விட்ட நிலையில், இணைய வேகம் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. இன்டர்நெட் வேகம் குறையும் போது உங்கள் அலுவலக பணிகள் பாதிக்கப்படலாம்.
நாம் இணையத்திற்கு Wi-Fi சார்த்திருக்க வேண்டிய நிலையில், சில சமயங்களில் இணைய வேகம் மிகக் குறைவாக இருப்பதால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்நிலையில், வைஃபை ரவுட்டர் மூலம் பெறும் இணைய வேகத்தை இரட்டிப்பாக்கும் சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
வீட்டின் மைய பகுதியில் வைஃபை ரூட்டரை வைக்கவும்
உங்கள் வைஃபை ரூட்டரை அமைப்பதற்கு உங்கள் வீட்டின் மைய பகுதி பொதுவாக சிறந்த இடமாகும், ஆனால் இது அனைத்து வீட்டிற்கும் சரியாக பொருந்தும் என சொல்ல இயலாது. நீங்கள் எங்கு அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் இது சார்ந்துள்ளது. மிக முக்கியமாக, Wi-Fi ரவுட்டர் உங்கள் வீட்டின் மிக முக்கியமான வைஃபை மிக அதிகமாக பயன்படுத்தப்படும் பகுதிக்கு அருகில் வைக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | BSNL தனது 4G சேவையை ‘இந்த’ நாளில் தொடங்கலாம்; கவலையில் Jio-Airtel
ரூட்டரை உயரமாக வைத்திருக்கவும்
ரவுட்டர் தங்கள் சிக்னலை கீழ்நோக்கி பரப்பும் தன்மையைக் கொண்டுள்ளன, எனவே கவரேஜை அதிகரிக்க ரூட்டரை முடிந்தவரை உயரமாக வைப்பது நல்லது. அதை உயரமான அலமாரியில் வைக்க முயற்சிக்கவும் அல்லது சுவரில் பொருத்தலாம்.
எலக்ட்ரானிக் உபகரணங்கள் அருகில் இருக்க கூடாது
மற்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெரிய உலோக பொருட்களிலிருந்து விலகி இருக்கும் இடத்தை தேர்வு செய்ய முயற்சிக்கவும். உங்கள் ரவுட்டருக்கு அருகில் உள்ள சுவர்கள், பெரிய தடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை சிக்னலில் குறுக்கிடுகின்றன. எடுத்துக்காட்டாக, மைக்ரோவேவ்கள் 2.4GHz பேண்டில் வலுவான சமிக்ஞையை வெளியிடுகின்றன. இது வைபை வேகத்தை பாதிக்கும்.
மேலும் படிக்க | Tech Tips: மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR