புதிய சலுகை திட்டத்துடன் வந்துவிட்டது Airtel; ரூ.299 மட்டுமே!

Airtel நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ.299-ல் Unlimited Calling திட்டத்தினை அறிவித்துள்ளது!

Last Updated : Jul 24, 2018, 11:08 AM IST
புதிய சலுகை திட்டத்துடன் வந்துவிட்டது Airtel; ரூ.299 மட்டுமே! title=

Airtel நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ.299-ல் Unlimited Calling திட்டத்தினை அறிவித்துள்ளது!

Reliance Jio, Vodafone போன்ற டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் அவர்களுடன் போட்டிப் போடும் வகையில் ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்து வருகின்றது.

அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ.299-ல் Unlimited Calling திட்டத்தினை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் ரூ.299 செலுத்தி 45 நாட்களுக்கு நாடுமுழுவதிலும் அனைத்து அழைப்புகளையும் இலவசமாக மேற்கொள்ளலாம். இதை தவிற தினம் 100 குறுஞ்செய்திகளும் அவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

எனினும் இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இலவச 4G டேட்டா வழங்கப்பட மாட்டாது. இலவச 4G டேட்டா சலுகைகளுடன் வரும் திட்டங்களாக Airtel நிறுவனம் அறிவித்து இருப்பவை.. Rs 249 மற்றும் Rs 349 திட்டங்கள், இவை இரண்டு திட்டங்களும் இலவச டேட்டா மற்றும் Unlimited Calling வசதியுடன் வருகின்றது, எனினும் இத்திட்டங்கள் வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக Airtel நிறுவனம்., தனது Landline வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை திட்டத்தினை அறிமுகம் செய்தது. அதன்படி Airtel வாடிக்கையாளர்கள் அதிவேக 300mbps பிராட்பேண்ட சேவையினை வெரும் ரூ,2199-க்கு பெற முடியும் என அறிவித்தது.

இத்திட்டத்தின் மூலம், மாதம் ஒன்றிர்க்கு ரூ.2199 செலுத்துவதன் மூலம், 300mbps வேகத்தில் 1200GB டேட்டாவினை வாடிக்கையாளர்கள் பெறுவர். மேலும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் பெறுவர் எனவும் குறிப்பிட்டது.

இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு Airtel நிருவனத்தின் இதர சேவைகளான Wynk Music, Airtel TV சந்தாக்கள் இலவசமாக வழங்கபடும். அத்துடன் Amazon Prime சந்தாவும் இலவசமாக கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தினை ஆன்லைன் மூலம் வரும் அக்டோபர் 31-க்குள் பெறுபவர்களுக்கு கூடுதலாக 1TB டேட்டா போனாஸாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News