அமேசானில் அலறவைக்கும் ஆப்பர்... ஸ்மார்ட்வாட்ச்கள் ரூ.1000க்கும் கம்மியா... முழு விவரம்

Smartwatch Under Rs 1000: அமேசான் நிறுவனத்தில் தற்போது 1000 ரூபாய்க்கும் கீழ் விற்பனையில் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச்களை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 8, 2024, 01:21 PM IST
  • இதில், புளூடூத் அழைப்பு மற்றும் வலுவான பேட்டரி இருக்கும்.
  • இதில் சில ஆரோக்கிய அம்சங்களும் வழங்கப்படும்.
  • ஸ்மார்ட்வாட்ச்கள் பல்வேறு தரப்பினராலும் விரும்பப்படுகிறது.
அமேசானில் அலறவைக்கும் ஆப்பர்... ஸ்மார்ட்வாட்ச்கள் ரூ.1000க்கும் கம்மியா... முழு விவரம் title=

Smartwatch Under Rs 1000: பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை ஸ்மார்ட்வாட்சை பயன்படுத்தும் வழக்கத்திற்கு வந்துவிட்டனர். ஸ்மார்ட்போன்கள் அளவிற்கு ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடும் அதிகரித்துவிட்டது எனலாம். அந்த வகையில், பண்டிகை காலங்களில் ஸ்மார்ட்போன்களை போன்று ஸ்மார்ட்வாட்ச்களும் அதிரடி தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த வகையில், கிரேட் குடியரசு தின விற்பனை (Amazon Great Republic Day Sale 2024) அமேசான் தளத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இருப்பினும், இந்த மெகா விற்பனைக்கு முன், அந்நிறுவனம் பல சாதனங்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது. இவற்றில் ஸ்மார்ட்வாட்ச்களும் அடங்கும். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஸ்மார்ட்வாட்சை வாங்க நினைத்தால், அதவாது ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்கக்கூடிய சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களை இங்கு காணலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச்களில், புளூடூத் அழைப்பு மற்றும் வலுவான பேட்டரி மற்றும் இதய துடிப்பு மானிட்டர் போன்ற ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களையும் நீங்கள் பெறுவீர்கள். 

BeatXP Flare Pro

இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் அல்ட்ரா HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 60Hz ஆகும். இதில் புளூடூத் அழைப்பு வழங்கப்படுகிறது. இது இதயத் துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன் மற்றும் தூக்க முறை ஆகியவற்றைக் கண்காணிக்கும் ஆரோக்கிய கண்காணிப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. இது தவிர, ஸ்மார்ட்வாட்சில் AI குரல் உதவியாளர் மற்றும் ஜம்போ பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை 999 ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க 12 ஜிபி RAM, அசத்தல் கேமரா... iQOO மொபைலுக்கு ரூ.4 ஆயிரம் நேரடி தள்ளுபடி!

TAGG Verve NEO 

இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.69 HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த வாட்ச்சில் 60க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இது 24 மணி நேரமும் இதயம் மற்றும் ரத்த ஆக்ஸிஜனேற்றத்தை கண்காணிக்கிறது. கேம்ஸ் மற்றும் கால்குலேட்டர் இதில் கிடைக்கும். இது தவிர, இந்த ஸ்மார்ட்வாட்ச் சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டுள்ளது, இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும். அமேசான் தளத்தில் இதை நீங்கள் 899 ரூபாய்க்கு வாங்கலாம்.

Boat Blaze Smartwatch 

இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசான் தளத்தில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த வாட்ச் 1.75 இன்ச் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதனை பயன்படுத்துவது பயனர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 24×7 இதய துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்புக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் பல ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. இதன் பேட்டரி வேகமாக சார்ஜ் ஆகும். இது ஒரு வாரத்திற்கு அதாவது 7 நாட்களுக்கு முழுமையாக சார்ஜ் நிற்கும்.

pTron Reflect Pro

இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் வடிவமைப்பு ஆப்பிள் வாட்ச் 8 ப்ரோ போன்றே உள்ளது. இது 1.85 இன்ச் HD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன் ரெஸ்சோல்யூசன் 240x286 பிக்சல்கள். இது தவிர, ஸ்மார்ட்வாட்ச்சில் 8 ஸ்போர்ட்ஸ் மோடுகளுடன், இதய துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜனை கண்காணிக்கும் வசதி உள்ளது. இதன் பேட்டரி முழு சார்ஜில் 3 நாட்கள் வரை நீடிக்கும். இதன் விலை 999 ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க | மொபைல் வாங்கப்போறீங்களா... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க - அமேசானில் வருகிறது அதிரடி விற்பனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News