ஹாட்ஸ்டார் இலவசம்: கெத்து காட்டும் வோடபோன் ஐடியா..! ஜியோ, ஏர்டெல் ஜெர்க்..!

Vodafone Idea: வோடஃபோன் ஐடியா நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை மிக குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டத்தில் இலவசமாக கொடுத்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2024, 09:52 PM IST
  • இலவசமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பார்க்கலாம்
  • ஏர்டெல், ஜியோவை விட குறைவான விலையில்
  • வோடாஃபோன் ஐடியா 155 ரூபாய் பிளான் பற்றி தெரியுமா?
ஹாட்ஸ்டார் இலவசம்: கெத்து காட்டும் வோடபோன் ஐடியா..! ஜியோ, ஏர்டெல் ஜெர்க்..! title=

பிரபலமான திரைப்படங்களை பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பிரதான தேர்வாக ​​Netflix, Amazon Prime Video, Jio Cinema மற்றும் Disney+ Hotstar ஆகிய ஓடிடி தளங்கள் இருக்கின்றன. இந்த ஓடிடிகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. எல்லா தளங்களிலும் சிறப்பான படங்கள், வெப் சீரிஸ்கள் இருக்கின்றன. இதில் கூடுதலான அம்சம் என்னவென்றால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சில நிகழ்ச்சிகளை இலவசமாகவே பார்க்க முடியும். குறிப்பிட்ட நிகழ்ச்சி மற்றும் சினிமாக்களுக்கு சந்தாவும் தேவை.

இருப்பினும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா 499 ரூபாய் செலுத்தாமல், இலவசமாக கூட Disney+ Hotstar -ஐ பார்க்கலாம். ஹாட்ஸ்டாரின் சந்தா செலுத்தாமலேயே வெறும் 155 ரூபாய் வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தில் ரீச்சார்ஜ் செய்து ஓடிடியை பார்த்துவிடலாம். ஏர்டெல், ஜியோ நிறுவனங்களைவிட மிக குறைவான விலையில் ஹாட் ஸ்டார் சந்தாவை கொடுத்து வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் பார்க்கலாம். 

மேலும் படிக்க | மார்ச் மாதத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் இந்த 4 ஸ்மார்ட்போன்கள்... புதுசு கண்ணா புதுசு!

இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா

வோடபோன் ஐடியாவின் ரூ.155 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 8 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில், 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா இலவசம். இது ஒரு ஆட் ஆன் திட்டம் மட்டுமே.

ஏர்டெல் ரூ 839 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.839 ரீச்சார்ஜ் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் அன்லிமிடெட் அழைப்பு வசதியையும் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். திட்டத்தில் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.

ஜியோ ரூ 328 திட்டம்

ஜியோவின் ரூ.328 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இது தவிர, திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 3 மாதங்களுக்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | Pulsar பித்து உங்களுக்கும் உண்டா... வந்துவிட்டது NS125... விலையை கேட்டா அசந்துருவீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News