வாட்ஸ்சப்பில் இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா? உசார் மக்களே!

வாட்ஸ் அப் பயனர்கள் பாதுகாப்பிற்காக டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷன் செய்துகொள்ளுமாறு மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Oct 9, 2022, 11:33 AM IST
  • வாட்ஸப்பில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது.
  • பிரபலங்களின் பெயர்களில் மோசடி நடைபெறுகிறது.
  • பயனர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்சப்பில் இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா? உசார் மக்களே!  title=

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் யாருமே இருக்கமுடியாது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல ஸ்மார்ட்போன்களில் பல அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றது.  அதில் மக்களிடம் பிரபலமாக உள்ள செயலி வாட்ஸ்அப். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொழில் பயன்பாட்டிற்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், கல்வி பயன்பாட்டிற்காகவும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.  தனது பயனர்களை கவரும் பொருட்டு வாட்ஸ்அப் நிறுவனமும் அடிக்கடி பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது, வாட்ஸ்அப்பில் புகைப்படம், வீடியோக்கள், மெசேஜ்கள், ஃபைல்கள், லொகேஷன்கள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடியும்.  இவ்வளவு வசதிகள் நிறைந்த வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மேலும் படிக்க |  க்ரோமிற்கு அடுத்து? ஓலா, ஊபருக்கு தடை - அதிக கட்டணம் வசூலிப்பதால் அதிரடி அறிவிப்பு

உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே மோசடி கும்பல் பல மோசடி குற்றங்களை செய்து வருகின்றது, தற்போது மோசடி கும்பல் வாட்ஸ்அப் பயனர்களை குறிவைத்து புதுவிதமான மோசடியில் இறங்கியுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த மோசடி சம்பவம் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போலியான சிம் கார்டு பெற்று அந்த என்னிலிருந்து வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி அதில் பிரபலங்கள் அல்லது உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் புகைப்படங்களை இணையதளத்திலிருந்து எடுத்து அதனை புரொஃபைல் பிக்சராகவும் வைத்துவிடுக்கின்றனர்.  அந்த வாட்ஸ்அப் எண்ணிலிருந்து மற்றவர்களுக்கு நிதி உதவியை கேட்டோ அல்லது ஆன்லைன் டிரான்ஸாக்ஷன் செய்யவோ அல்லது ஏதேனும் பரிசுகளை வழங்குமாறும் சில செய்திகளை அனுப்பி மோசடி செய்கின்றனர்.

அதனால் வாட்ஸ்அப் பயனர்கள் இனிமேல் தெரியாத வாட்ஸ்அப் கணக்கிலிருந்து ஏதேனும் லிங்குகள், ஆப்ஸ்கள், பரிசுகள் பெற அல்லது விளையாட என வரக்கூடிய எந்தவொரு லிங்குகளுக்கும், செய்திகளுக்கும் பதிலளிக்க கூடாது என்றும், அப்படி அந்த லிங்குகளை திறக்கும்பொழுது உங்களது தகவல்கள் அனைத்தையும் மோசடி கும்பல் திருடிவிடும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.  கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற எந்தவொரு விவரங்களையும் தனிப்பட்ட நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும், பாதுகாப்பிற்காக டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷன் செய்துகொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.  மேலும் இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் செய்யலாம் என்றும் அரசு கூறியுள்ளது.

மேலும் படிக்க | உங்கள் பாஸ்வேர்டை திருடும் 400 ஆஃப்கள் - பேஸ்புக் விடுத்த எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News