WhatsApp இனி குறிப்பிட்ட Smartphone-களில் செயல்படாது; ஏன்?

பிரபல சேட்டிங் செயலியான WhatsApp, நாளை முதல் சில இயங்குதளங்களில் தன் சேவைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது!

Last Updated : Dec 31, 2018, 03:14 PM IST
WhatsApp இனி குறிப்பிட்ட Smartphone-களில் செயல்படாது; ஏன்? title=

புதுடெல்லி: பிரபல சேட்டிங் செயலியான WhatsApp, நாளை முதல் சில இயங்குதளங்களில் தன் சேவைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது!

WhatsApp உலகளாவிய ரீதியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உடனடி செய்தி சேவை ஆகும். WhatsApp தற்போது தொடர்ந்து அப்டேட்களை செய்து வருகிறது. 

அந்த வகையில் தற்போது WhatsApp செயலி சில இயங்குதளங்களில் தன் சேவைகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களின் இயங்குதளங்களால்தான் இனி வெளியிடப் போகும் அப்டேட்களை சப்போர்ட் செய்ய முடியாமல் உள்ளது என்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறது WhatsApp நிறுவனம்.

கீழ் பட்டியலிடப்பட்டு இயங்குதளங்களில் இனி WhatsApp செயல்படாது.

  • Android versions older than 2.3.3
  • Windows Phone 7
  • iPhone 3GS/iOS 6
  • Nokia Symbian S60

WhatsApp செயலி கீழ்காணும் இயங்குதளங்களில் செயல்படும...

  • Android running OS 4.0+
  • iPhone running iOS 8+
  • Windows Phone 8.1+
  • JioPhone
  • JioPhone 2

இதுகுறித்து WhatsApp தெரிவிக்கையில்... தற்போது பழைய போன்களில் இருந்து புது போன்களுக்கு வாடிக்கையாளர்களின் உரையாடல் வரலாறு பறிமாற்றம் செய்ய இயலாது, எனினும் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் உதவி கொண்டு உரையாடல் வரலாறுகளை தரவிறக்கம் செய்து பறிமாற்றம் செய்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Trending News