உங்கள் வாழ்க்கையில் பல்வேறு வகையான, பல்வேறு வண்ணங்களில் ஆன வாகனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிறிய-பெரிய, நீலம்-மஞ்சள் அல்லது கருப்பு-வெள்ளை. இதுவரை நீங்கள் பல வாகனங்களில் பயணித்திருக்க கூடும், ஆனால் வாகனத்தின் நிறம் எதுவாக இருந்தாலும், அவற்றின் டயர்கள் எப்போதும் கருப்பு நிறத்தில் இருக்கும் என்பதை பற்றி நீங்கள் எப்பொழுதாவது யோசித்து இருக்கிறீர்களா.
இருப்பினும், 1917 ம் ஆண்டுக்கு முன்பு வாகனத்தின் டயர்கள் கருப்பாக இல்லை. அந்த நேரத்தில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்களின் நிறம் பழுப்பு அல்லது வெள்ளை நிறமாக இருக்கும். பிறகு என்ன நடந்தது இந்த நிறம் கருப்பு நிறமாக மாறியது, அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தகவல்களின்படி, 1917 க்கு முன்பு, டயர்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்ட இயற்கை ரப்பர் பழுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆரம்ப கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து டயர்களும் மிகவும் லேசானதாக இருந்தன. அப்போது டயர்களை வலுப்படுத்த ஜிங்க் ஆக்சைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், அதன் டயர்களில் லேசு தன்மை இருந்தது. இதற்குப் பிறகு, டயர் தயாரிப்பாளர்கள் அதை மேம்படுத்த சில மாற்றங்களைச் செய்தனர். டயர்களை வலுவாக்கும் நோக்கில் டயர் தயாரிப்பதில் கார்பன் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அதன் நிறம் கருப்பு நிறமாக மாறியது. சந்தையில் கருப்பு டயர்களின் அறிமுகம் 1917 ஆம் ஆண்டு தொடங்கியது.
மேலும் படிக்க | CNG விலை உயர்வு; நடுத்தர மக்களுக்கு அதிக பாதிப்பு
கார்பன் ஏன் சேர்க்கப்பட்டது?
சூரியனின் புற ஊதா கதிர்கள் ரப்பர் டயர்களுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்துகின்றன, இதன் காரணமாக அவற்றில் விரிசல்களும் தோன்றின. மறுபுறம், கார்பன் இந்த புற ஊதா கதிர்களைத் தடுக்கிறது. இதன் காரணமாக டயர்கள் நீண்ட காலம் நீடிக்கும். இது தவிர, கார்பன் சேர்ப்பதால், சாலையில் வாகனம் செல்லும் போது டயர்களில் வெடிப்புகள் ஏற்படும் என்ற அச்சமும் குறைகிறது. அனைத்து டயர் தயாரிப்பாளர்களும் இந்த முறையை பின்பற்றியதற்கும், இதன் மூலம் டயரின் நிறம் கருப்பு நிறமாக மாறுவதற்கும் இதுவே முக்கிய காரணம்.
மேலும் படிக்க | சிலிண்டர் மானியம் நிறுத்தப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR