லாப்டாப், ஸ்மார்ட்போன், பைக், துபாய் பயணம் வெல்ல சூப்பர் வாய்ப்பு: அசத்தும் Vodafone Idea

வோடபோன் ஐடியாவின் சூப்பர் கேமிங் மூலம், பயனர்கள் பம்பர் பரிசுகளைத் தவிர ஒவ்வொரு IPL போட்டியிலும் தினசரி பரிசுகளையும் வெல்ல முடியும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 22, 2021, 05:54 PM IST
லாப்டாப், ஸ்மார்ட்போன், பைக், துபாய் பயணம் வெல்ல சூப்பர் வாய்ப்பு: அசத்தும் Vodafone Idea  title=

கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2021 மீண்டும் தொடங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையில் கிரிக்கெட் பரபரப்பு தொடங்கி விட்டது. வோடபோன் ஐடியா (Vi), தனது டி-20 ரசிகர்களுக்காக, அதிகப்படியான பொழுதுபோக்கு அம்சங்களுடன், சலுகைகளுடன் 'பிளே அலாங்' இன் இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபலமான கேம் கான்செப்ட்டின் இந்த இரண்டாவது பதிப்பு பயனர்களுக்கு பல பரிசுகளையும் அளிக்கிறது. நேரடி டி 20 லீக் போட்டிகளை விளையாடும் போதும் பார்க்கும்போதும் பயனர்களை அதில் ஈடுபடுத்தி வைக்கிறது. இந்த சலுகை செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை இருக்கும். இதன் மூலம், பயனர்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பைக்குகளை வெல்ல ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கும்.

Vi பயனர்களுக்காக 'ப்ளே அலோங்கை' அறிமுகம் செய்கிறது

பயனர்கள் பம்பர் பரிசுகளைத் தவிர ஒவ்வொரு போட்டியிலும் தினசரி பரிசுகளையும் வெல்ல முடியும். டி 20 போட்டியின் இரண்டாம் கட்டத்திற்கு, Vi, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைந்து Vi வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஸ்மார்ட்போன்களில் இருந்து அவர்களின் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

ALSO READ: தினசரி 4GB டேட்டாவை வழங்கும் VI; ரூபாய் 249க்கு அதிரடி ரீசார்ஜ் பிளான்

Vi 'ப்ளே அலாங்கின்’ கருத்தாக்கம்

'ப்ளே அலாங்' கேம் Vi ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு கிடைக்கும். பயனர்கள் Vi செயலியின் முகப்புப் பக்கத்திலிருந்து ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். திட்டமிடப்பட்ட போட்டியின் அடிப்படையில், தினசரி போட்டிகள் இருக்கும். யார் டாஸ் வெல்வார்கள், அன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள், அடுத்த ஓவரில் எத்தனை ரன்கள் எடுக்கப்படும் என்பது போன்ற கணிப்புகளை பயனர்கள் செய்ய வேண்டும்.

கிரிக்கெட் பற்றி நன்றாக தெரிந்தால் துபாய் பயணம்

இந்த போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற பயனர்கள் தங்கள் கிரிக்கெட் (Cricket) அறிவை பயன்படுத்த வேண்டும். ஒரு போட்டி முடிந்தவுடன், பயனர்களின் லீடர் போர்ட் வெளியிடப்படும். அன்றைய போட்டிகளுக்கான வெற்றியாளர்கள் தினமும் அறிவிக்கப்படுவார்கள். 26 நாள் காலப்பகுதியில் பங்கேற்பாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் வெல்லலாம். வெற்றிகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.

இந்த போட்டிகளில் தினசரி பரிசாக ஸ்மார்ட்போன்கள் (Smartphone), மடிக்கணினிகள், ஐபாட்கள், ஸ்போர்ட்ஸ்பைக்குகள் மற்றும் துபாயில் இலவச விடுமுறைகள் ஆகியவை கிடைக்கும்.

ALSO READ: Vodafone Idea அசத்தல் திட்டம் அறிமுகம்: அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் வரம்பற்ற தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News