தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Last Updated : May 4, 2018, 06:25 PM IST
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!   title=

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஜூன் மாதம் வரை தமிழகத்தில் இயல்பானா நிலையை விட வெயில் அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது. தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பிருந்தே வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இருந்தது. 

இதனால், மக்கள் வீட்டிற்குள்ளே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் 108 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இதையடுத்து இன்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் கோடையை சமாளிக்கும் அச்சத்தில் மக்கள் உள்ளனர். 

வானிலை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இன்று இயக்குநர் கே.பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்:- "மே மாதம் முழுவதும் வெப்ப நிலை அதிகமாக காணப்படும். 

கத்திரி வெயில் தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். ஜூன் மாதம் வரை தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரித்தே காணப்படும். உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் திசை, ஈரப்பதம் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார். 

முன்னதாக இன்று அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதையொட்டி, "கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்யும். மழை இல்லாத காலங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். வேலூர், திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மாலை அல்லது இரவுகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

 

Trending News