காவிரி வழக்கின் விசாரணை; மே 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

காவிரி வழக்கின் விசாரணையினை வரும் மே 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்!

Last Updated : May 8, 2018, 01:14 PM IST
காவிரி வழக்கின் விசாரணை; மே 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு! title=

காவிரி வழக்கின் விசாரணையினை வரும் மே 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்!

வரைவு திட்டம் பற்றி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும், காவிரி வரைவு திட்டத்தினை வரும் மே 14-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது!

#CauveryManagementBoard...

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 

இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துறை செய்தது. மேலும் இந்த மனுவினை மே 3 விசாரணையின் போது விசாரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மே 2-ஆம் நாள் காவிரி விவகாரம் குறித்து பதில் அளிக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவினை நிராகரித்தது.

இந்நிலையில் கடந்த மே 3 அன்று, காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மத்திய அரசு வரைவுத்திட்டத்தினை தாக்கல் செய்யவில்லை. மாறாக மேலும் அவகாசம் வேண்டும் என கோரியது. கர்நாட்டக தேர்தலுக்கு பிறகு வரைவு திட்டத்தினை தாக்கல் செய்வதாக இதற்கு  காரணத்தினை தெரிவித்தது. 

இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4-TMC தண்ணீர் வழங்கவேண்டும் என கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவினை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தது. மேலும் காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது எனவும், அடுத்தகட்ட விசாரணை வரும் மே 8-ஆம் நாள் நடைபெறும் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை நடைப்பெற்றது. வழக்கினை விசாரித்த நீதிபதி வரும் மே 14-ஆம் தேதிக்கு விசாரணையினை ஒத்தி வைத்துள்ளார்!

நாளை இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இன்று "கர்நாடகாவில் மழை பற்றாக்குறை காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது" என கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது!

Trending News