அம்மானா சும்மாவா? அசர வைக்கும் தாய்பாசம், வைரல் வீடியோ

Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.

Viral Video:இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி உள்ளது. இதில் ஒரு போலார் பியர் குட்டி தண்ணிரில் விழுந்துவிட அதை காப்பாற்ற அதன் தாய் ஓடோடி வந்து அதை மேலே தள்ளுவதை காண முடிகின்றது. மனிதனாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் தாயன்புக்கு எந்த வித்தியாசமும் இல்லை என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்ற்து. இதற்கு பல வித லைக்குகளும் ஷேர்களும் கிடைத்துள்ளன. 

Trending News