தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

கிழக்கு திசை காற்றழுத்தம் தாழ்வு ஏற்பட்ட வேகம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated : Mar 19, 2018, 09:39 AM IST
தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! title=

கிழக்கு திசை காற்றழுத்தம் தாழ்வு ஏற்பட்ட வேகம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுயழந்து அங்கேயே மறைந்துவிட்டது. ஆனால் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகம் மற்றும் வேறுபாடு தென் இந்தியாவில் உள்ளது.

இதனால் தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை ஆகிய உள் மாவட்டங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று பெய்த மழை அளவு பற்றிய விவரம்....! 

தென்காசி 7 செ.மீ., ஆயிகுடி 6 செ.மீ., திருபுவனம், பாபநாசம் (நெல்லை மாவட்டம்) , கோவில்பட்டி தலா 5 செ.மீ., ஆண்டிப்பட்டி, செங்கோட்டை தலா 4 செ.மீ., துறையூர், பேச்சிப்பாறை, பெரம்பலூர், தளி தலா 3 செ.மீ., வத்திராயிருப்பு, ஊட்டி, கோத்தகிரி, பெரியகுளம், ஒகேனக்கல், சேத்தியாதோப்பு, கூடலூர் தலா 2 செ.மீ., தேன்கனிக்கோட்டை, பேரையூர், நன்னிலம், சின்னகல்லார், சிவகங்கை, முசிறி, தாத்தையங்கார் பேட்டை, உளுந்தூர்பேட்டை, நாகர்கோவில், உத்தமபாளையம், திருக்கோவிலூர், கிருஷ்ணகிரி,சிதம்பரம், சங்கரன்கோவில், நிலக்கோட்டை, பரமக்குடி, சிவகிரி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Trending News