இறைவழிபாட்டில் தேங்காய்-க்கு குடுமி வைத்து உடைப்பது ஏன்?

தமிழர்களின் ஆன்மிக பயணத்தில் தேங்காய்களுக்கு தனி பங்கு உண்டு, இது பாதியில் வந்தது அல்ல, இறை வழிபாடுகளில் தொன்றுதொட்டு வந்துக்கொண்டிருப்பது!

Written by - Mukesh M | Last Updated : Mar 30, 2018, 05:10 PM IST
இறைவழிபாட்டில் தேங்காய்-க்கு குடுமி வைத்து உடைப்பது ஏன்? title=

தமிழர்களின் ஆன்மிக பயணத்தில் தேங்காய்களுக்கு தனி பங்கு உண்டு, இது பாதியில் வந்தது அல்ல, இறை வழிபாடுகளில் தொன்றுதொட்டு வந்துக்கொண்டிருப்பது!

இறை வழிபாட்டில் மட்டுமின்றி ஆன்மிக சம்பந்தப்பட்ட அனைத்து செயல்பாடுகளிலும் தேங்காய்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படு வருகிறது. மனித வாழ்வின் ஆதி முதல் அந்தம் வரை நாம் தேங்காய்களை பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றோம்.

எனக்கு குழந்தை நல்லபடியாக பிறந்தால், பிள்ளையாரப்பா உனக்கு 108 தேங்காயு உடைக்கின்றேன் என ஆரம்பித்து, அதே குழந்தை வளர்ந்து ஆளாகி இறக்கையில் உடலின் தலைமோட்டில் தேங்காய் வைத்து பூஜிப்பது வரை தேங்காய் மனித வாழ்வில் முழுமையா பயணிக்கின்றது. இடைப்பட்ட வாழ்விலாவது நம்மை விடுகிறதா என்ன? மனித மனதில் படிந்திருக்கும் பயத்தினை போக்க இறைவழிபாடும், இறைவனுக்கான வேண்டுதல்களிலும் தேங்காய் தான் நாயகன். இறைவழிபாடுகளில் வைக்கப்படும் கும்பங்களினை தேங்காய் இல்லாமல் உண்டாக்க முடியுமா?

தேங்காய இல்லாத வேண்டுதல்களை நாம் இப்போது பார்க்க முடியுமா! வேண்டுதல்கள் மட்டுமே புது வீடு கட்டுகையில் தேங்காய் உடைத்தே பூஜே ஆரம்பமாகிறது. ஏன் கேளிக்கை விஷயங்களான சினிமா ஆரம்பிப்பது தேங்காய் உடைக்கப்பட்டு தான்.

சரி போகட்டும்... நாம் விஷயத்திற்கு வருவோம், தேங்காய்க்கு ஏன் இவ்வளவு முக்கியதுவம். ஏன் நாம் தேங்காய் உடைக்கின்றோம்? இதற்காண காரணம் சற்று வேடிக்கையாக தான் இருக்கும்...

ஒரு காலத்தில் இறை வழிபாடுகளி மிருகங்களை பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது நாம் அறிவோம். இந்த பலி வழக்கத்தினை தடுக்கவே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப் படுகிறதாம். அதாவது தேங்காயினை மனிதான உவமை படுத்தி உயிர் பலி கொடுப்பது போல உடைக்கபடுகிறது.

மனிதனைப் போல் தேங்காய்யை அளங்கரிக்கவே, அதன் தலைப் பகுதியில் குடிமி வைக்கின்றனர். இதற்கு மனித உருத்தினை கொண்டுவருவது தான் காரணம். இதேப்போல் தேங்காய் உள் நெய் வேதியம் வைப்பது என்பது. தீய எண்னம் கொண்ட மனிதர்களை உடைத்து அவர் மனதை வேதியமிட்டு நல்ல மனிதனாக மாற்றுவது என்று பொருள்படவே இவ்வாறான வழிபாடு நடத்படுகிறது என்கின்றனர் ஆன்மீகவாதிகள் தெரிவிக்கின்றனர்.

சரி மிருகங்களை பலி கொடுக்க வேண்டாம், அதற்கு ஏன் தேங்காய் மாற்றாக பயன்படுத்தப்பட வேண்டும்?

ஏனெனில் தேங்காய் குடுமி வைக்கையில் பக்தர்கள் 3 கண்கள் தெரிவது போல் குடுமி வைப்பதினை நாம் பார்த்திருப்போம். இது சிவபெருமாள் அம்சத்தினை கொண்டு வரும் முயற்சியில் தான். மேலும் தேங்காய் என்பது பல வியாதிகளுக்கான இயற்கை மருந்து, இதனால் தான் வழிப்பாட்டிற்கு பின்னர் அதே தேங்காவினை நமக்கு பிரசாதமாக தருகின்றனர். 

நம் வழிபாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு அறிவியல் நோக்கம் இருக்கும் என்பது இந்த தேங்காய் வழிபாட்டிலே நமக்கு புரிந்துவிடும்! 

Trending News