புள்ளி மானை முழுவதுமாக விழுங்கிய 11 படி மலைப்பாம்பு!

ஓர் அரிதான சம்பவத்தில், தன்னைவிட எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுவதுமாக மலைப் பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது!

Updated: Mar 13, 2018, 05:09 PM IST
புள்ளி மானை முழுவதுமாக விழுங்கிய 11 படி மலைப்பாம்பு!
Screen Grab (Youtube)

புளோரிடா: ஓர் அரிதான சம்பவத்தில், தன்னைவிட எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுவதுமாக மலைப் பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது!

சுமார் 11 அடி நீளம் மற்றும் 14kg எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்று தன்னைவிட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுமையாக விழுங்கியுள்ளது.

புளோரிடாவின் கோலியர் செமினோல் ஸ்டேட் பார்க் பகுதியை சேர்ந்த உயிரியளாலர் ஒருவரால் இந்நிகழ்வு படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த மானை விழுங்கிய பின்னர் வனப்பகுதியில் சுற்றி திரிந்த மலைப்பாம்பு தான் விழுங்கி மானை கக்குகையில் அவரால் பதியபட்டுள்ளது.

மலைப்பாம்புகள் பொருத்தவரை விஷம்கொண்ட கொடிய உயிரனங்களின் வகைகளில் இணைக்கப்படுவதில்லை எனினும், மிகவும் ஆபத்தான உயிரனங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

அதிலும் மிகவும் கொடிய பாம்பு வகைகள் என்ற வகைப்பாட்டில் முதல் 5 இடங்களை வகைப்படுத்தினால் அதில் ஒரு இடத்தினை மலைப்பாம்புகளுக்கு கொடுத்து தான் ஆக வேண்டும் அதிலும் இந்து புர்மிஸ் மலைப்பாம்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

தென்மேற்கு புளோரிடா அறிவியல் பாதுகாப்பு துறையின் உயிரியளாலர் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட இந்த படமானது இம்மாதத்தில் வெளியிட இருப்பதாக தகவலகள் வெளியாகியுள்ளது!