கொரோனா வைரஸ் இல்லாத 15 நாடுகள்.. இதுவரை ஒரு பாதிப்பு கூட இல்லை -ஒரு அலசல்

அதேநேரத்தில் இந்த கொடிய கொரோனா வைரஸ் செல்ல முடியாத அல்லது பரவ முடியாத சில நாடுகள் உலகில் இன்னும் உள்ளன. இதுபோன்ற 15 நாடுகளின் பெயர்களை உங்களுக்கு பட்டியலிட்டு உள்ளோம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 15, 2020, 03:54 PM IST
  • கொரோனா வைரஸ் இதுவரை 20 லட்ச பேரை பாதித்துள்ளது, 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
  • கொரோனா இதுவரை உலகின் 6 கண்டங்களை அதன் தொற்றுநோயால் பாதித்துள்ளது.
  • 210 நாடுகளை அடைந்த கொரோனா. 15 நாடுகளில் ஒரு கொரோனா தொற்று கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் இல்லாத 15 நாடுகள்.. இதுவரை ஒரு பாதிப்பு கூட இல்லை -ஒரு அலசல் title=

புது தில்லி: இந்த நேரத்தில் கொரோனா வைரஸின் பெயரை கேள்விப்படாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. உலகக் குழந்தைகளுக்கும் தெரிந்ததாகத் தான் இருக்கிறது. இந்த வைரஸ் ஜனவரி முதல் சீனாவில் பரவத் தொடங்கியது மற்றும் கடந்த மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. இப்போது வரை, இந்த வைரஸ் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. மேலும் 1 லட்சத்துக்கும் 26 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளது. 

அதேநேரத்தில் இந்த கொடிய கொரோனா வைரஸ் செல்ல முடியாத அல்லது பரவ முடியாத சில நாடுகள் உலகில் இன்னும் உள்ளன. இதுபோன்ற 15 நாடுகளின் பெயர்களை உங்களுக்கு பட்டியலிட்டு உள்ளோம். 

கொரோனா வைரஸ் உலகின் ஏழு கண்டங்களில் 6 கண்டங்களை அடைந்துள்ளது. வைரஸ் பாதிப்பு இல்லாத ஒரே கண்டம் அண்டார்டிகா தான். அங்கு கொரோனா வைரஸின் ஒரு பாதிப்பு கூட கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் இது தவிர, கொரோனா வராத சில நாடுகளும் உள்ளன.

210 நாடுகளை எட்டிய கொரோனா வைரஸ் செல்லாத முடியாத இடத்தைப் பாருங்கள்:

1. கொமொரோஸ் (Comoros)
2. கிரிபதி (Kiribati)
3. லெசோதோ (Lesotho)
4. மார்ஷல் தீவுகள் (Marshall Islands)
5. மைக்ரோனேஷியா (Micronesia)
6. நவுரு (Nauru)
7. வட கொரியா(North Korea)
8. பலாவ் (Palau)
9. சமோவா(Samoa)
10. சாலமன் தீவுகள் (Solomon Islands)
11. தஜிகிஸ்தான் (Tajikistan)
12. டோங்கா (Tonga)
13. துர்க்மெனிஸ்தான் (Turkmenistan)
14. துவாலு (Tuvalu)
15 வனடு (Vanuatu)

இதற்கு காரணம் என்ன?
முதல் காரணம் மிகவும் எளிது. இங்கு மக்கள் தொகை மிகவும் குறைவு. இந்த 15 நாடுகளில் பெரும்பாலானவை சிறிய தீவுகள். அத்தகைய சூழ்நிலையில், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சமூக விலகல் அம்கு நடந்து வருகிறது என்று சொல்லலாம். 

வைரஸ் ஏன் வட கொரியாவை அடையவில்லை?
ஏவுகணை சோதனைகளுக்கான செய்திகளில் பெரும்பாலும் செய்திகளில் வரும் வட கொரியா, கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து தப்பியுள்ளது. சீனாவுடனான எல்லையாக இருந்தபோதிலும் ஆகு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை. இதுவும் ஆச்சரியமளிக்கிறது. Corona Free என்று தன்னை அறிவித்துக் கொண்ட வடகொரியா, கொரோனா பரவக்கூடும் என சந்தேகிக்கும் இடங்களான சாலைகள், கடல்கள் மற்றும் விமான வழித்தடங்கள் என அனைத்தும் மூடியதாகக் கூறி வருகிறது. கொரிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, அவர்கள் எந்தவொரு தொற்று இல்லையென்றாலும், முன்னேச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் போன்றவற்றுக்கான முழுமையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Trending News