பொய் சொன்னவருக்கு 80 கசையடி... பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பாகிஸ்தானின் கராச்சி நீதிமன்றம் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தனது முன்னாள் மனைவியின் நடத்தை குறித்து பொய்யாகக் குற்றம் சாட்டி, குழந்தையை ஏற்க மறுத்தத்தற்காக 80 கசையடி தண்டனை கொடுத்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 9, 2024, 05:05 PM IST
  • பல தசாப்தங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள தண்டனை.
  • 'நான் என் மனைவியுடன் ஆறு மணி நேரம் மட்டுமே இருந்தேன்'
  • ஜாமீன் தொகையாக ஒரு லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு.
பொய் சொன்னவருக்கு 80 கசையடி... பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு title=

பாகிஸ்தானின் கராச்சி நீதிமன்றம் ஒருவருக்கு அரிய தண்டனை வழங்கியுள்ளது. சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தனது முன்னாள் மனைவியின் நடத்தை குறித்து பொய்யாகக் குற்றம் சாட்டி, குழந்தையை ஏற்க மறுத்தத்தற்காக 80 கசையடிகள் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மனைவி மீது பொய்யான குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் (Pakistan) உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி மாலிர் ஷெஹ்னாஸ் போஹ்யோ, தனது சட்டப்பூர்வ குழந்தையை ஏற்க மறுத்தத்தற்காகவும், அவரது முன்னாள் மனைவி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காகவும் ஃபரித் காதருக்கு 80 கசையடிகள் விதித்து தீர்ப்பளித்தார். 1979 ஆம் ஆண்டு குவாஸ்ஃப் (Qazf) சட்டத்தின் பிரிவு 7 (1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் திங்களன்று தண்டனை விதித்தது. பொய் சொன்னதன் காரணமாக எண்பது கசையடி கொடுத்து தண்டிக்கப்படுவார் என்று இந்த சட்டத்தின் பிரிவில் எழுதப்பட்டுள்ளது.

மேல்முறையீடு எந்த நீதிமன்றத்திலும் செல்லாது

தீர்ப்பை வழங்கும்போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பொய்யர் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு ஃபரித் காதர் தாக்கல் செய்யும் மேல்முறையீடு எந்த நீதிமன்றத்திலும் செல்லாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஜாமீன் தொகையாக ஒரு லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு

குற்றவாளிக்கு சவுக்கடி தண்டனை உறுதி செய்யப்பட்ட பிறகு, கசையடி தண்டனைக்காக இந்த நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும் இடத்திலும் அவர் ஆஜராக ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக, ஃபரீத் காதர் ரூ.1 லட்சம் ஜாமீன் பத்திரத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் படிக்க | பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவி... தேர்வு எழுத அனுமதிக்காத அவலம் - பகீர் சம்பவம்

2015 பிப்ரவரியில் நடந்த திருமணம்

ஃபரீத் காதர் தோஷின் என்பவரை பிப்ரவரி 2015 இல் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரு மாதம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும், டிசம்பர் 2015 இல் அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் கூறினார். இருப்பினும், கணவர் அவளை பராமரிக்கவோ அல்லது தனது வீட்டிற்கு மகளையும் மனைவியையும் அழைத்துச் செல்லவோ மறுத்து விட்டார்.

ஜீவனாம்சம் வழங்குமாறு குற்றவாளிக்கு உத்தரவிட்ட நீதிபதி

பாதிக்கப்பட்ட பெண் குடும்பநல நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ​​நீதிபதி மனைவிக்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். அவரது மகள் மற்றும் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு குற்றவாளிக்கு உத்தரவிட்டார். இருப்பினும், இதனை எதிர்த்து, ஃபரித் நீதிமன்றத்தில் இரண்டு விண்ணப்பங்களைச் செய்தார். அதில் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், குழந்தை தன்னுடையது அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பின்னர் அவர் தனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றார்.

'நான் என் மனைவியுடன் ஆறு மணி நேரம் மட்டுமே இருந்தேன்'

ஃபரித் காதர் விசாரணையின் போது, ​​தனது முன்னாள் மனைவியுடன் தான் இருக்கவில்லை என்றும், மேலும் திருமணத்திற்குப் பிறகு அவர் தன்னுடன் ஆறு மணி நேரம் மட்டுமே தங்கியிருந்ததாகவும், பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறினார்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள தண்டனை

ஃப்ரீத் காதர் வழக்கு தொடர்பாக கருத்து கூறிய வழக்கறிஞர் சாய்ரா பானு, நான் கடந்த 14 ஆண்டுகால வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். இந்நிலையில் குவாஸ்ஃப் சட்டத்தின், ​​7-வது பிரிவின் கீழ் கசையடி தண்டனை விதிக்கப்பட்டதை நான் பார்த்ததில்லை என்று கூறினார். இந்த கசையடி தண்டனை பல தசாப்தங்களுக்கு பின் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | 29 மணி நேரம் பெல்டால் அடித்து டார்ச்சர்! கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு-பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News