அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பீதியில் பெற்றோர்

சீனாவில் தோன்றி உலகையே உலுக்கிப் போட்ட கொரோனா பெருந்தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 22, 2021, 01:22 PM IST
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பீதியில் பெற்றோர்  title=

வாஷிங்டன்: உலகையே பாடாய் படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் சீற்றம் மெல்ல குறைந்து வருகிறது. மக்களும் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். 

அலுவலகங்கள், பொது இடங்கள், போக்குவரத்து என அனைத்தும் கட்டம் கட்டமாக திறந்து வரும் நிலையில், இறுதியில் பள்ளிகளும் திறக்கப்பட்டன. எனினும், பல இடங்களில் இதற்கான பின்விளைவும் காணக்கிடைத்து வருகிறது.

அமெரிக்காவிலும் (America) பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. ஆனால், இதன் எதிரொலியாக கொரோனா பாதிப்புக்கு ஆளான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  அங்கு, கடந்த ஒரு வாரத்தில் 2.5 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பெற்றோர்கள், கல்வி நிர்வாகங்கள் என அனைவரையும் பீதிக்கு ஆளாக்கியுள்ளது. 

சீனாவில் (China) தோன்றி உலகையே உலுக்கிப் போட்ட கொரோனா பெருந்தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா தொற்றால் அமெரிக்காவில் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையும் அச்சமளிக்கும் வகையில் உள்ளது. அங்கு இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்னிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்தைத் தாண்டி செல்கிறது. 

ALSO READ: WHO vs Covaxin: கோவேக்சின் தடுப்பூசியை WHO விரைவில் அங்கீகரிக்கலாம்…

வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால், இதற்கு முந்தைய பெருந்தொற்றுகளிலும் அமெரிக்கா வலுவான பாதிப்புகளை சந்தித்துள்ளது என்பது தெரியும். 1918-1919 ஆண்டுகளில் உலகை அச்சுறுத்திய ஸ்பானிஷ் ப்ளூ அமெரிக்காவை சற்று அதிகமாகவே ஆட்டிப்படைத்தது. அப்போதும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 6 லட்சத்து 75 ஆயிரமாக இருந்தது. ஆனால், தற்போது கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அந்த எண்ணிக்கையையும் கடந்து செல்கிறது. 

இதற்கிடையில் மேலும் பல பகீர் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. வரவிருக்கும் குளிர்காலத்தில் அமெரிக்காவில் மேலும் 1 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

திடீரென பல குழந்தைகள் தொற்றுக்கு ஆளாகியுள்ளதால், குழந்தைகள் நல மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது இந்த திடீர் பரவலுக்கு முக்கிய காரணமாக பார்க்கபப்டுகின்றது. கடந்த ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் 2.5 லட்சம் குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி கூறியுள்ளது. 

செப்டம்பரில், ஆறாம் தேதி வரை, சுமார் 2,500 குழந்தைகள் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்றால், குழந்தைகளின் பாதிப்பும், மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதும் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட தரவு மூலம் தெரிய வருகிறது. 

இந்தியாவிலும் பல பாநிலங்களில் பள்ளிகள் திறந்துவிட்டன. இந்த நிலையில், குழந்தைகளுக்கு இடையே கொரோனா தொற்று அதிகமாக பரவாமல் இருக்க, அனைத்து தரப்பினரும், அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியமாகும். 

ALSO READ: TN Corona Update: செப்டம்பர் 21; மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News