தாய்லாந்து குகையில் சிக்கிய 12 கால்பந்து வீரர்கள் மீட்பு!!

தாய்லாந்து குகையில் சிக்கிய அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளரும் மீட்கப்பட்டுள்ளார். 

Updated: Jul 10, 2018, 06:21 PM IST
தாய்லாந்து குகையில் சிக்கிய 12 கால்பந்து வீரர்கள் மீட்பு!!
Photo: Facebook/ThaiSEAL

தாய்லாந்து குகையில் சிக்கிய அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளரும் மீட்கப்பட்டுள்ளார். 

தாய்லாந்தின் மே ஸை பகுதியில் உள்ள குகையினுள் 16 வயதிற்குட்பட்ட 12 கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் 25 வயதாகும் பயிற்சியாளர் உட்பட 13 பேர் சிக்கிக் கொண்டனர். குகையில் சிக்கி 9 நாட்களுக்கு பிறகு மீட்பு படையினர் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்தனர். 

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக குகையினுள் தேங்கும் மழைநீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வந்தது. குறுகிய, கரடுமுரடாண பாதையை கொண்ட குகை என்பதால் மீட்பு படையினர் பெரும் சவாலை சந்தித்து தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், கனமழை காரணமாகமீட்பு பணிகள் முடங்கியது. மழை தொடர்ந்தால் குகையினுள் நீர் தேக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், நீரை வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குகையின் பின்புறம் வழியாக பாதை அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உணவு இல்லாமல் சோர்வடைந்த நிலையில் இருந்த அவர்களுக்கு தொடர்ந்து உணவு, மருந்துகள் முதலியவை வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், தாமாக முன்வந்து சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடற்படை முன்னாள் அதிகாரி ஒருவர் உள்ளே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ராணுவம் மற்றும் கடற்படை சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, வீரர்களின் கடுமையான முயற்சியால் ஜூலை 8 ஆம் தேதி 4 சிறுவர்களும், நேற்று 4 சிறுவர்களும் மீட்கப்பட்டிருந்தனர். எஞ்சிய 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதையடுத்து வெற்றிகரமாக இந்த 5 பெரும் இன்று மீட்கப்பட்டுள்ளனர். குகையில் உள்ளே இருப்பவர்களை மீட்க ஒரு மாத காலம் வரை கூட  ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 3 நாட்களில் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்களுக்கு உலக அளவில் பல்வேறு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close