6.6 கோடி ரூபாய் வீடு வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை... காரணம் என்ன தெரியுமா?

Bizarre World News: சுமார் ரூ.6.6 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வெறும் ரூ.100க்கு விற்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 16, 2023, 11:27 PM IST
  • இச்சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது.
  • அதிக பராமரிப்பு செலவை தவிர்க்க அவை விற்கப்படுகின்றன.
  • இவை வெளிச்சந்தையில் விற்கப்படவில்லை.
6.6 கோடி ரூபாய் வீடு வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை... காரணம் என்ன தெரியுமா? title=

Bizarre World News: வீட்டை கட்டுவதோ, ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை வாங்குவதோ, ஏன் சென்ட் அளவில் நிலத்தை வாங்குவதோ கூட தற்போதெல்லாம் மிகவும் விலை ஏறிவிட்டது. சாதரண மக்கள் ஒரு வீட்டை வாங்குவதற்கு பலரும் வங்கிகளில் கடன் வாங்கும் நிலை உள்ளது, அந்த வகையில் பண மதிப்பானது ரியல் எஸ்டேட்டில் உயர்ந்துவிட்டது.

உலகில் உள்ள பலருக்கு வீடு வாங்கும் கனவு வெறும் கனவாகவே உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் ஒவ்வொரு மூலையிலும் சொத்து விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. ஆனால் இந்தச் செய்தியைப் படித்தவுடன் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பிரிட்டனில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பிளாட்கள் வெறும் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதை கேட்ட நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால் இது உண்மை சம்பவம் ஆகும்.

பிரிட்டனில் சுமார் ரூ.6.6 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வெறும் ரூ.100க்கு விற்கப்பட்டுள்ளன என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லூயிஸ் டவுனில் மக்கள் அதிக வாழ்க்கைச் செலவில் இருந்து விடுபட, மலிவு விலையில் வீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மனைவியிடம் தாய் பால் குடிக்கும் கணவன்... நன்மைகள் கொட்டி கிடக்குதாம்.. இது நல்லா இருக்கே!

இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, சமூக நில அறக்கட்டளை மொத்தம் 11 அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க ஒப்புக்கொண்டது மற்றும் இப்போது இந்த சொத்துக்களை புதுப்பிக்க ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் வழங்கியுள்ளது.

இது குறித்து துணை கவுன்சில் தலைவர் டேவிட் ஹாரிஸ் கூறுகையில், "இந்த குடியிருப்புகள் வெளிச்சந்தையில் விற்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால் இங்குள்ள மலிவு விலை வீட்டு வசதி மீறப்பட்டிருக்கும். வீடுகள் வாடகைக்கும், உரிமைக்கும் கொடுக்கப்பட்ட இடம் இது" என்றார்கள். அவர் மேலும் கூறுகையில், "சமூகம் தலைமையிலான மறு-மேம்பாடு திட்டம், அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்ந்து மலிவு விலையில் வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும். இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் விடுமுறைக்கு தான் மக்கள் வருவார்கள்" என்றார்.

2021ஆம் ஆண்டில், கார்ன்வால் லைவ், கவுண்டியில் உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் இரண்டாவது வீடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, அதாவது இந்த வீடுகள் அவற்றின் உரிமையாளர்களின் இரண்டாவது வீடாகச் செயல்படுகின்றன. இவை வீட்டு உபயோகத்திற்காக அல்ல, ஆனால் விடுமுறை நாட்களிலும் மற்ற பயணங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. நார்த் ரோடு பில்டிங் கவுன்சில் 2021ல் இதை ஒரு 'நிதி இழப்பு' என்றும், தேவைக்கு அதிகமாக செலவாகும் என்றும் விவரித்தது. இதனால், அதிக பராமரிப்பு செலவை தவிர்க்க, அடுக்குமாடி குடியிருப்புகள் விற்கப்படுகின்றன.

மேலும் படிக்க | ரிஷி சுனக் பிரதமராக நாராயண மூர்த்தி உதவினாரா? போரிஸ் ஜான்சனின் வருத்தம் அம்பலமானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News