Bizarre News In Tamil: இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண் ஆசிரியை, 15 வயது மாணவர் ஒருவருடன் கட்டாய உடலுறவு கொண்டதை தொடர்ந்து, அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 வயதான காண்டிஸ் பார்பர் என்ற அந்த பெண்மணி கடந்த 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிரின்ஸ் ரிஸ்பரோ பள்ளியில் கற்பிக்கும் போது, ஒரு மாணவருடன் உடலுறவு கொண்டதற்காக ஆறு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஆபாச மெசேஜ்கள்
முன்னதாக, இவரின் தவறான நடத்தையினால் வழக்கு விசாரணையின் போதே, பார்பர் காலவரையின்றி ஆசிரியர் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர் மீண்டும் பணியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. பார்பர் மூன்று குழந்தைகளுக்கு தாய் ஆவார். வழக்கு விசாரணையின் போது, இவருக்கு உறுதுணையாக இருந்து பார்பரின் கணவர், குற்றம் நிரூபணமான பின் அவரை விட்டு பிரிந்து சென்றார். தற்போது பார்பரின் கணவர் இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். அந்த இணைக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மாணவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக பார்பர் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பார்பர், 15 வயதான அந்த மாணவனுக்கு ஆபாசமான போட்டோக்கள் மற்றும் ஆபாச குறுஞ்செய்திகளையும் அனுப்பி அவரை தன்வசம் வரவைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் படிக்க | ஹமாஸ் இஸ்ரேல் போருக்கு மத்தியில், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஈரான்! இருவர் பலி
கட்டாய உடலுறவு
பார்பர் 2018ஆம் ஆண்டில், அந்த 15 வயது மாணவருக்கு செய்தி அனுப்பத் தொடங்கினார். தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பி இறுதியில் அவரை ஒரு ஒதுக்குப்புறமான வயல்வெளிக்கு அழைத்துச் சென்று அவருடன் உடலுறவு கொண்டது விசாரணையில் அம்பலமானது. அவர் ஸ்னாப்சேட் செயலியில் பள்ளியில் இருக்கும் போதும் அந்த மாணவருக்கு ஆபாசமாக மெசேஜ் செய்து வந்துள்ளார்.
குறிப்பாக, வகுப்பறையில் மற்றும் பள்ளி அசெம்பிளி உள்ளிட்ட இடங்களிலும் அந்த மாணவனுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அவரின் அந்தரங்க புகைப்படத்தையும் அந்த மாணவனுக்கு அனுப்பியிருக்கிறார். அதுமட்டுமின்றி, வேறு ஆசிரியர்களிடம் இதுகுறித்து கூறினால், 'உன்னை உண்டில்லாமல் செய்துவிடுவேன்' என்றும் மிரட்டியிருக்கிறார்.
இருப்பினும், பார்பர் இன்னமும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறார். தான் குற்றமற்றவள் என்றும் கூறுகிறார். இருப்பினும், விசாரணை குழு 'பார்பர் அந்த மாணவருடன் பொருத்தமற்ற மற்றும் பாலியல் ரீதியாக பரிந்துரைக்கும் முறையில் பேசியது உறுதியானது' என அறிக்கை சமர்பித்தது.
பொதுநலனே முக்கியம்
அப்பகுதியின் கல்வித்துறை செயலர் சாரா பக்ஸ்சி இதுகுறித்து கூறுகையில்,''போதுமான ஆதாரம் இல்லாமல் இருந்தாலும், இதுபோன்ற நடத்தை மீண்டும் நிகழும் அபாயம் உள்ளது. இது மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வை ஆபத்தில் ஆழ்த்துகிறது. எனவே எனது முடிவை எட்டுவதில் இந்த விசாரணை குழுவுக்கு கணிசமான முக்கியத்துவம் கொடுத்துள்ளேன்.
பார்பரின் நலன்களை விட பொது நலனை பரிசீலிப்பதுதான் முக்கியம் என்று குழு முடிவு செய்தது. பார்பரின் நடத்தை மிகவும் மோசமானதாகவும் தீங்கு விளைவிப்பதாகவும் இருந்தது. எதிர்காலத்தில் அவர் ஆசிரியராக கற்பிக்க அனுமதிப்பது சரியாகாது" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | முட்டை விலை ரூ.400... வெங்காயம் ரூ.250... திணறும் மக்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ