பிரதமர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே 'வேலை தேடும்' போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் சுகாதார அமைச்சரும் நிதியமைச்சரும் பதவி விலகினர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 10, 2022, 10:11 AM IST
  • வேலை மையத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள மெழுகுச் சிலை.
  • போரிஸ் ஜான்சன் இடுப்பில் கை வைத்தப்படி இருக்கிறார்.
  • முகத்தில் புன்னகையுடன் அவரது டிரேட்மார்க் சிகை அலங்காரத்தில் காட்சி தருகிறார்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே 'வேலை தேடும்' போரிஸ் ஜான்சன் title=

பிரிட்டனில், ஒரு மாத காலம் முன்பாக, போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவிகித வாக்குகளைப் பெற்று போரிஸ் ஜான்சன் தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஆனாலும்,  தலைமைக்கு எதிராக கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு, அவருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும்  பதவி விலகினர். அவர்களை தொடர்ந்து மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

அரசியல் அழுத்தம் காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்.  பிரதமரின்  ராஜினாமாவிற்கு  பிறகு, மேடம் டுசாட்ஸ் நிறுவனம் பிளாக்பூலில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அவர் பதவி விலகுவதாக அறிவித்த உடனேயே, அருங்காட்சியகத்தில் இருந்து அவரது மெழுகு சிலையை அருங்காட்சியகம் அகற்றியது. இப்போது அவரது சிலையை மேடம் டுசாட்ஸ் நிறுவனம் லங்காஷயரில் சாலையோரத்தில் வேலை தேடுபவர்களுக்கான வேஎலை வாய்ப்பு மையத்திற்கு வெளியே நிறுவியுள்ளது. 

A wax figure of Prime Minister Boris Johnson from Madame Tussauds Blackpool stands outside the Job Centre Plus in Blackpool, Lancashire, following his resignation. Boris Johnson is quitting as Tory leader after ministers and MPs made clear his position was untenable #BorisJohnson pic.twitter.com/njtkdj4E5m

— peter byrne (@Peter_J_Byrne) July 7, 2022

 

மேலும் படிக்க | UK PM: இங்கிலாந்தின் பிரதமராவாரா இந்திய வம்சாவளி ரிஷி சுனக்: பிரசாரம் தொடங்கியது

லங்காஷயரில், போரிஸின் மெழுகுச் சிலை, 'வெக்கன்சி' என்ற போர்டுக்கு முன் வைக்கப்பட்டு, போரிஸ் வேலை தேடுவதைப் போன்று வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 7 ஆம் தேதி பிரிட்டனின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் போது, ​​​​போரிஸ் ஜான்சன், "உலகின் சிறந்த வேலையை விட்டு வெளியேறுவதில் எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்துள்ளது" என்றார். தற்போது போரிஸ் சிலை படத்தையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வேலை மையத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள இந்த மெழுகுச் சிலையில், போரிஸ் ஜான்சன் இடுப்பில் கை வைத்தப்படி இருக்கிறார். முகத்தில் புன்னகையுடன் அவரது டிரேட்மார்க் சிகை அலங்காரத்தில் காட்சி தருகிறார். சாலையோரத்தில் இருக்கும் இந்த சிலையை பார்த்து முதலில் வியப்படைந்த மக்கள், பின்னர் சிலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். 

வேலை மையத்திற்கு வெளியே சாலையில் வைக்கப்பட்டுள்ள போரிஸின் இந்த சிலை, இந்த ஆண்டு மார்ச் மாதம் மேடம் டுசாட்ஸ் நிறுவனத்தினால் திறந்து வைக்கப்பட்டது. மொத்தம் 20 கலைஞர்கள் இணைந்து இந்த சிலையை உருவாக்கினர். 8 மாத கடின உழைப்புக்குப் பிறகு இந்த சிலை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பிரிட்டன் புதிய பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்???

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR


Trending News