முன்னாள் காதலனின் வன்மம்! பெண்ணுக்கு 99 பில்லியன் இழப்பீடு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Texas Revenge Prn Case: டெக்சாஸ் பழிவாங்கும் ஆபாச வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 99 பில்லியன் ரூபாய் இழப்பீடு கிடைக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 16, 2023, 07:04 PM IST
  • பெண்ணின் ஆபாச படத்தை பகிர்ந்தவருக்கு 99 பில்லியன் ரூபாய் தண்டனை
  • துணிச்சலாக வழக்கு பதிவு செய்த பெண்
  • குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கிய நீதிபதி
முன்னாள் காதலனின் வன்மம்! பெண்ணுக்கு 99 பில்லியன் இழப்பீடு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு title=

காதலராக இருக்கும்போது இனித்த உறவு, பிரிந்த பின் வன்முறையாக மாறி வாழ்க்கையையே கெடுக்கிறதே என்று அஞ்சாமல், நீதிமன்றத்தை அணுகிய பெண்ணுக்கு நியாயமான நீதிமன்ற தீர்ப்பு கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 99 பில்லியன் ரூபாய் இழப்பீடு கொடுக்க டெக்சாஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு அலாரம் அடிக்கும் வழக்காக இது பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 2022 இல் ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் சிவில் வழக்கைத் தாக்கல் செய்தார். உள்ளூர் காவல்துறையிடம் தனது பிரச்சனையைக் கூறி உதவி பெற்ற பிறகு, சிவில் நீதிமன்றத்தை அந்த பெண் நாடியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
 
வழக்கு என்ன?

டெக்சாஸில் வசித்து வரும் அந்தப் பெண்ணின் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் பெண்ணின் பெயர் DL என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்ணின் அடையாளம் வெளியில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது புரிந்துக் கொள்ள முடிகிறது. 

பெண்ணின் முன்னாள் காதலர், அவரது அந்தரங்க புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் பகிர்ந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (₹ 99,881,986,800.00) வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 2022 இல் ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தில் சிவில் வழக்கைத் தாக்கல் செய்த அந்தப் பெண், முன்னாள் காதலன் தனது நிர்வாண புகைப்படங்களை போலி ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் சுயவிவரங்களில் பகிர்ந்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க | பிரபல நடிகைக்கு ஆறு மாதம் சிறை தண்டனை-5 ஆயிரம் ரூபாய் அபராதம்! என்ன காரணம்..?

இனித்த உறவு கசந்தது எப்போது?  
அந்த மனுவில், குற்றம் சாட்டப்பட்டவருடன் 2016 ஆம் ஆண்டு டேட்டிங் செய்ய ஆரம்பித்ததாக அந்த பெண் கூறியுள்ளார். அக்டோபர் 2021 இல், இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். இந்த ஜோடி சிகாகோவில் ஒன்றாக வாழ்ந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் உறவின் போது அந்த பெண் தனது அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர்கள் பிரிந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் இந்த படங்களை சமூக ஊடக தளங்களிலும் வயது வந்தோருக்கான வலைத்தளங்களிலும் அவரது அனுமதியின்றி வெளியிட்டார்.

பிபிசி அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு டிராப்பாக்ஸ் கோப்புறை (Dropbox folder) மூலம் புகைப்படங்களின் இணைப்புகளையும் அனுப்பினார். குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணின் தொலைபேசி, சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல்கள் மற்றும் அவரது தாயின் வீட்டில் உள்ள கேமரா அமைப்பு ஆகியவற்றை அணுகியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

முன்னாள் காதலிக்கு மிரட்டல்  
குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காதலர், பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு அனுப்பிய செய்தியில், 'இந்த புகைப்படங்களை உன்னுடைய  இணையத்தில் இருந்து அழிக்க முயற்சித்து, வாழ்நாள் முழுவதையும் செலவழித்தாலும் அது நடக்காது. உன்னை சந்திக்கும் அனைவரும் இதைப் பற்றி கேட்பார்கள், உன்னைப் பற்றிய இணையத் தேடலில் ஈடுபடுவார்கள். மகிழ்ச்சியான வேட்டை இது' என்று குரூரமாக தனது வன்மத்தை வெளிப்படுத்தும் செய்தியையும் அனுப்பியுள்ளார்.

நீதிமன்ற விசாரணை
குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, ஆனால், அவர் சார்பில் அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்திற்குக் வந்திருந்தார். வழக்கை விசாரித்த ஜூரி, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு கடந்த கால மற்றும் எதிர்கால மன வேதனைக்காக $200 மில்லியன் மற்றும் $1 பில்லியன் வழங்க உத்தரவிட்டது.

மேலும் படிக்க | ரஜினி பட தயாரிப்பாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை..! அதிர்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News