உய்குர் முஸ்லிம்களை அடையாளம் காண சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது சீனாவின் அலிபாபா

சீனாவில் லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற முஸ்லீம் சிறுபான்மையினர்கள்  தடுப்பு முகாம்களில் கைது செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2020, 05:05 PM IST
  • சீனாவில் லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களில் கைது செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றனர்.
  • சாப்ட்வேர் குறித்த செய்தி வெளியான பின், அலிபாபா நிறுவனம் அது தொடர்பான தகவல்களையும் குறிப்புகளையும் அகற்றியது.
  • ஹுவாவேய் முகத்தை அடையாளம் கண்டறியும் மென்பொருளை பரிசோதனை செய்வதில் ஈடுபட்டுள்ளது என IPVM கூறியது.
உய்குர் முஸ்லிம்களை அடையாளம் காண சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது சீனாவின் அலிபாபா title=

ஷாங்காய்: சீனா தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா, முகங்களை அடையாளம் காணும் ஒரு சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது. இது  உய்குர் முஸ்லிம்களை அடையாளம் காண உதவும். முஸ்லீம் சிறுபான்மையினரை சீனா கொடுமைபடுத்திறது என்ற தொடர்ந்து உலக அளவில் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

அலிபாபாவின் கிளவுட்-கம்ப்யூட்டிங் வணிகத்திற்கான வலைத்தளம், வாடிக்கையாளர்கள், உய்கூர் மற்றும் பிற இன சிறுபான்மையினரை அடையாளம் கண்டறியும் மென்பொருளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி வெளியான பின், அலிபாபா (Alibaba) நிறுவனம் அது தொடர்பான தகவல்களையும் குறிப்புகளையும்  அகற்றியது.  அமெரிக்காவை தளமாகக் கொண்ட கண்காணிப்பு ஆராய்ச்சி நிறுவனமான ஐபிவிஎம் (IPVM) இந்த வலைப்பக்கங்களை கண்டறிந்து, அது தொடர்பான தகவல்களை, நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளுடன் பகிர்ந்து கொண்டதாக அதன் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சாப்ட்வேர் பரிசோதனை நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று அலிபாபா நிறுவனம் கூறியுள்ளது.கடந்த வாரம் தான், சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவேய் முகத்தை அடையாளம் கண்டறியும் மென்பொருளை பரிசோதனை செய்வதில் ஈடுபட்டுள்ளது, இது உய்குர் முகங்களை அடையாளம் கண்டு காவல்துறைக்கு எச்சரிக்கைகளை அனுப்பும் என IPVM கூறியது. இந்த தகவலை வாவேய் (Huawei) மறுத்துள்ளது.

ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, பார்சிலோனாவின் உலகக் கோப்பை வென்ற கால்பந்து வீரர் அன்டோயின் க்ரீஸ்மேன், இந்த தகவல் வெளியானதை அசுத்து ஹுவாவேய் (Huawei)  உடனான ஒப்புதல் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறினார்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனா கடைபிடித்துவரும் கொள்கைகள் காரணமாக சர்வதேச அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது, சீனாவில்  லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்கள் (Uyghur Mislims) மற்றும் பிற முஸ்லீம் சிறுபான்மையினர்கள்  தடுப்பு முகாம்களில் கைது செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் மனை உரிமை அமைப்புகள் கூறுகின்றனர்.

பெய்ஜிங் ஆரம்பத்தில் அப்படிப்பட்ட முகாம்கள் இல்லைவே இல்லை என மறுத்தது,.ஆனால் இப்போது அவர்களுக்கு இருக்கும் பயங்கரவாத எண்ணத்தை போக்கவும், வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தொழில் பயிற்சி மையங்கள் என்று அவை என சீனா கூறுகிறது.

ALSO READ | சிறுமிகள் அனைவரும் சிறுவர்களாக மாறும் உலகின் மர்மமான கிராமம்..!!!

பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகள் என்ற பெயரில், முகத்தின் மூலம் அடையாளம் கண்டறிதல், கருவிழி ஸ்கேனர்கள், டி.என்.ஏ மாதிரி சேகரித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக ஜின்ஜியாங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளன.

அலிபாபா சீனாவின் (China) இ-காமர்ஸ் துறையில் மிகப்பெரிய முன்னணி நிறுவனம் ஆகும். கிளவுட் கம்ப்யூட்டிங், செங்கல் மற்றும் மோட்டார் கடைகள் மற்றும் விநியோக சேவைகள் ஆகியவற்றை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம் வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த் நிறுவனமும் பிற சீன தொழில்நுட்ப நிறுவனங்களும் சீனாவின் அரசு பாதுகாப்பு துறையுடன் டிஜிட்டல் துறை தொடர்பாக ஒத்துழைப்பு உள்ளது தொடர்பாக தகவல் வெளியானதை அடுத்து வெளிநாட்டு ஆய்வுக்கு உட்பட்டு வருகின்றன.

அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் ஹுவாவேய் மீது தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், அதிகரித்து வரும் சீன-அமெரிக்க பதற்றங்களுக்கு மத்தியில் அலிபாபா உள்ளிட்ட பிற நிறுவனங்களுக்கும் தொடர்ந்து நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Sleepy Hollow Village: நடுரோட்டில் மாதக்கணக்கில் தூங்கும் மர்ம நோயால் வாடும் மக்கள்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News