ஒரு மாதமா எங்க போனீங்க அமைச்சரே? காணமல் போன வெளியுறவு அமைச்சரை நீக்கிய சீனா

China Minister Change: ஒரு மாதமாக 'காணாமல்' போன சீனாவின் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்பட்டார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2023, 06:47 PM IST
  • முன்னாள் அமைச்சரான சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங்
  • ஒரு மாதமா எங்க போனீங்க அமைச்சரே?
  • சீனாவில் பழைய வெளியுறவு அமைச்சரே புதியவராக நியமனம்
ஒரு மாதமா எங்க போனீங்க அமைச்சரே? காணமல் போன வெளியுறவு அமைச்சரை நீக்கிய சீனா title=

பெய்ஜிங்: இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச இராஜதந்திர உச்சிமாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சர் கின் கேங் கலந்துக் கொள்ளவில்லை. அவர், குறிப்பிடப்படாத உடல்நலக் காரணங்களுக்காக பணியில் இருந்து விலகுவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியது, ஆனால் அவர் பற்றிய விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாததால், சர்வதேச அளவில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. 

சீனா வெளியுறவு மந்திரி கின் கேங்கை பதவியில் இருந்து நீக்கிய சீன அரசு, அவருக்குப் பதிலாக அவரது முன்னோடி வாங் யியை நியமித்ததாக சீனாவின் அரசு ஊடகங்கள் தெரிவித்தன, அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. 57 வயதான கின், அமெரிக்காவுக்கான தூதராக சிறிது காலம் பணியாற்றினார். கடந்த டிசம்பரில் வெளியுறவு அமைச்சராக பணியை ஏற்றுக்கொண்ட கின் கேங், ஜூன் 25 அன்று பெய்ஜிங்கில் வருகை தரும் தூதர்களை சந்தித்த பிறகு பொது இடங்களில் காணப்படவில்லை.

இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச இராஜதந்திர உச்சிமாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சர் கின் கேங் கலந்துக் கொள்ளவில்லை என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில், சீனாவின் மூடத்தனமான தலைமைகளிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவெடுப்பது பற்றிய சந்தேகத்தை அதிகமாக்குவதாக, ஆய்வாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
 
நீண்ட காலமாக குயின் பற்றிய வேறு எந்த தகவல்களும் தெரியாத நிலையில், 69 வயதான வாங், வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வாங், 2018 மற்றும் 2022 க்கு இடையில் சீனாவின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | Aliens: செவ்வாய் கிரகத்திலும் ஏலியன்கள்! நிரூபிக்காவிட்டாலும் உண்மை இதுதான்!

வெளியுறவு அமைச்சர் மாற்றப்பட்டது தொடர்பான  காரணங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சீன அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. அமெரிக்கா உடனான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, தற்போது பெய்ஜிங் அவர்களுடனான உறவில் மிகவும் குறைந்த அளவு இணக்கமாக இருப்பதாக கருதப்படும் நிலையில், இந்த அமைச்சர் மாற்றம் பார்க்கப்படுகிறது.

மாஸ்கோவுடன் உக்ரைன் மற்றும் பெய்ஜிங்கின் நெருங்கிய உறவுகள், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப மோதல்கள் மற்றும் பெய்ஜிங் தனக்குச் சொந்தமானது என்று கூறும் ஜனநாயக, சுயராஜ்யத் தீவான தைவான் உள்ளிட்ட பிரச்சினைகளில் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான சீனாவும், அமெரிக்காவும் முரண்படுகின்றன.

கின் கேங் - சீனாவின் வெளியுறவு அமைச்சர்
சீன வெளியுறவு மந்திரி Qin Gang பணியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு பதவியில் இருந்து நீக்கப்பட்டார், 57 வயதான கின் கேங், ஒரு காலத்தில் சீன அதிபர் Xi Jinping-க்கு நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 டிசம்பரில், அமெரிக்க தூதராக சிறிது காலம் பதவியேற்ற பிறகு, நாட்டின் இளைய வெளியுறவு மந்திரிகளில் ஒருவராக கின் ஆனார், Xi உடனான நெருக்கமே, அவருக்கு அந்த முக்கியமான அமைச்சர் பதவியை கொடுத்ததாக அப்போது கூறப்பட்டது.  .

கின் கேங் - சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்
Qin Gang 2006 மற்றும் 2014 க்கு இடையில் இரண்டு முறை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளராகவும், 2014 மற்றும் 2018 க்கு இடையில் தலைமை நெறிமுறை அதிகாரியாகவும் இருந்தார், வெளிநாட்டு தலைவர்களுடன் சீன அதிபருக்கான தொடர்புகளுக்கு அவர் பாலமாக செயல்பட்டார் என்று ஊகிக்கப்பட்டது.  

மேலும் படிக்க | கொரோனாவை விட கொடூரம்...? பரவும் மெர்ஸ் தொற்று - WHO எச்சரிக்கை!

ஆனால் அவர் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தையும் வெளிப்படுத்தினார், ஜூலை 2021 இல் அவர் தூதராக வாஷிங்டனுக்கு வந்தவுடன், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையே அசாதாரணமான பொது சண்டைக்குப் பிறகு, உறவுகள் "பெரிய வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள்" இருப்பதாக அறிவித்தார்.

இரு பெரும் சக்திகளுக்கு இடையேயான உறவுகள் அவர் தூதராக இருந்த காலத்தில் அல்லது அதற்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் மேம்படவில்லை. வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பெய்ஜிங் கூறும் மற்றும் வாஷிங்டன் ஆதரிக்கும் தைவானின் சுய-ஆட்சி, ஜனநாயக தீவு உள்ளிட்ட பிரச்சினைகளில் இரு தரப்பும் அடிக்கடி முரண்படுகின்றன.

ஜூன் 25 - கின் கேங் 
ஜூன் 25 அன்று, அவர் பெய்ஜிங்கில் இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், ஆனால் அதன்பிறகு அவரை பொதுவெளியில் பார்க்க முடியவில்லை.   சீனாவின் உயர்மட்ட தலைமை அமைப்புகளில் ஒன்றான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவுக்கு பதவி உயர்வு பெற்ற வாங், தற்போது நாட்டின் வெளியுறவு அமைச்சராகியுள்ளார்.

ஜனவரி மாதம் ஆப்பிரிக்கா மற்றும் மே மாதத்தில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்த கின் கேங், அங்கு அவர் உக்ரைனில் போர்நிறுத்தம் தொடர்பாக பேசினார் என்பதும், ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்காததற்காக சீனா விமர்சிக்கப்பட்டது என்பதும் கூர்ந்து அவதானிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும்.

வெளியுறவு மந்திரி ஆன பிறகு, தைவான் மற்றும் ரஷ்யாவுடனான சீனாவின் உறவுகள் போன்ற சூடான பிரச்சினைகளில் கின் கருத்துக்கள் அவரது முன்னோடியும், தற்போதைய வெளியுறவு அமைச்சரின் கருத்துக்களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அஜித் தோவல் வாங் யீ சந்திப்பு... இணைந்து பணியாற்ற பரஸ்பர மரியாதை - புரிதல் அவசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News