அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஏப்ரல் மாதம் சந்திப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்று பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த தகவலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

Last Updated : Mar 30, 2017, 03:34 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபர் ஏப்ரல் மாதம் சந்திப்பு title=

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்று பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த தகவலை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் நடைபெறும் இந்த முதல் சந்திப்பின்போது, வட கொரியா, தென் சீனக் கடல் விவகாரம் முதல் வர்த்தக பிரச்சினைகள் வரையிலான இன்றியமையாத பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசவிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசியில் உரையாடிய டிரம்ப், சீனாவின் ஒரே சீனா கொள்கைக்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News