ஊழல் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 6, 2018, 06:05 PM IST
ஊழல் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறை title=

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். 

லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கி குவித்துள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வந்த நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீஃபை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. 

நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நான்கு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் என்பது லட்சம் பவுண்ட் அபராதமும், அவரது மகள் மரியம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் இருபது லட்சம் பவுண்ட் அபராதமும் விதித்தது. மேலும் நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் வரும் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News