அணு ஆயுதத்தை பயன்படுத்தினால்... ரஷ்யாவை எச்சரிக்கும் G7 நாடுகள்!

ரஷ்யா உக்ரேனிய தலைநகர் கீவ் மற்றும் பிற இடங்களில் திங்களன்று பெரிய அளவிலான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதனை உலக பல நாடுகள் பல கண்டித்துள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 12, 2022, 01:44 PM IST
  • உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா பெரிய அளவில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள்.
  • உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், நடந்து கொள்ளும் ரஷ்யா.
அணு ஆயுதத்தை பயன்படுத்தினால்... ரஷ்யாவை எச்சரிக்கும் G7 நாடுகள்! title=

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா பெரிய அளவில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்திய நிலையில்,  G7 நாடுகள்  தாக்குதல்களை வன்மையாக கண்டித்ததோடு, உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்  என்று எச்சரித்துள்ளது. வீடு. G7 நாடுகளின் தலைவர்கள் (பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான்), "உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், நடந்து கொள்ளும் ரஷ்யா, அணு ஆயுத தாக்குதல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரசாயன, உயிரியல் அல்லது அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, திங்களன்று, ரஷ்யா உக்ரேனிய தலைநகர் கீவ் மற்றும் பிற இடங்களில் திங்களன்று பெரிய அளவிலான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதனை உலக பல நாடுகள் பல கண்டித்துள்ளன. உக்ரைனில் உள்ள குடிமக்கள் மீதும்,  உள்கட்டமைப்புகள் மீதும் சமீபத்தில் நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன், G7 நாடுகள் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் இந்த அறிக்கை வெளியானது.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக்கொண்டது பற்றி பேசிய G7, ஐநா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது என்று கூறியது. சர்வதேச சட்டத்தின் இந்த மீறல்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்  என்றும், உக்ரைன் மீதான ரஷ்யா அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், நிபந்தனையின்றி தனது படைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று ஜி7 நாடுகள் கோரின. 

உக்ரேனிய பிரதேசத்தின் புவிநிலையை மாற்றும் ரஷ்யாவின் சட்டவிரோத முயற்சிகளுக்கு அரசியல் அல்லது பொருளாதார ஆதரவை வழங்கும் பிற நாடுகளின் மீதும், ரஷ்யா மீதும் தொடர்ந்து சுமத்துவதாகவும் G7 பொருளாதார தடைகளை விதிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரரின் உருக்குலைந்த தோற்றம்.. உலகை உறைய வைத்த புகைப்படம்

"உக்ரைனின் சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளில் இறையாண்மை ஆகியவற்றிற்கான எங்கள் முழு ஆதரவை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். சர்வதேச சட்டத்திற்கு இணங்க, குறிப்பாக ஐ.நா. சாசனத்தின் கீழ், ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளவும், முழுமையாக மீட்கவும் உக்ரைனுக்கு முறையான உரிமை உள்ளது " என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News