உக்ரைன் மருத்துவ கல்லூரிகள் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியது!

பல மருத்துவப் பல்கலைக்கழகங்கள், பெரும்பாலும் மேற்கு உக்ரைனில் அமைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை (மார்ச் 14) முதல் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 15, 2022, 08:38 PM IST
  • உக்ரைனில் தொடரும் ஷெல் தாக்குதல்கள்
  • ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களில் இருந்து வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.
  • கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் மார்ச் 21 முதல் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கும்.
உக்ரைன் மருத்துவ கல்லூரிகள் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியது! title=

ரஷ்ய ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு மத்தியில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனை விட்டு வெளியேறிய மாணவர்கள், எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலை கொண்டிருந்த நிலையில்,  இந்திய மாணவர்களுக்கு  நிம்மதி அளிக்கும் வகையில், பல உக்ரைனிய மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. இருப்பினும் சில மாணவர்கள் நடைமுறை வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் உள்ளதை எண்ணி கவலையடைந்துள்ளனர்.

பல மருத்துவப் பல்கலைக்கழகங்கள், பெரும்பாலும் மேற்கு உக்ரைனில் அமைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை (மார்ச் 14) முதல் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. ரஷ்யப் படைகளின் தொடர்ச்சியான ஷெல்லுக்கு மத்தியில் உக்ரைனில் நேரடி வகுப்புகளை நடத்துவது சாத்தியமற்றது.

Danylo Halytsky Lviv தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம், Ivano-Frankivsk தேசிய மருத்துவ பலகலைகழகம், Vinnytsia National Pirogov மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் Bogomolets தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவை திங்கள்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்

தொடர்ச்சியான ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் தங்கள் ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலிருந்து அல்லது பாதுகாப்பான இடங்களிலிருந்து வகுப்புகளை எடுத்து வருவதாக இந்திய மாணவர்கள் தெரிவித்தனர்.

டேனிலோ ஹாலிட்ஸ்கி எல்விவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் கனிஷ்க் கூறுகையில், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற நிலையில் மனம் குழப்பமாக இருந்தது. வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டதில் எனக்கு மிகவும் நிம்மதி. " என்றார். இப்போது உக்ரைன் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளதால் எங்கள் எதிர்காலம் என்னவாகும் என்று நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம்" என்று கனிஷ்க் பிடிஐயிடம் கூறினார்.

ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு உக்ரைனை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. இந்திய அரசின் ஆபரேஷன் கங்கா நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உக்ரைனில் இருந்து 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் ஏற்கனவே அழைத்து வரப்பட்டுள்ளனர்.

"இந்த (ஆன்லைன் வகுப்புகள்) போதாது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் நேரடி வகுப்புகள் சாத்தியம் இல்லாத நிலையில், நாங்கள் எங்கள் படிப்பைத் தொடரலாம் என்ர வகையில் இந்த செய்தி நிம்மதியாக உள்ளது" என்று வின்னிட்சியா தேசிய பைரோகோவ் மருத்துவ மாணவர் கின்ஜல் சவுகான் கூறினார். மாணவர்களின் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நடைமுறை வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் இருப்பது மாணவர்களிடையே பெரும் கவலையாக உள்ளது. "நடைமுறை வகுப்புகள் இதுவரை நடத்தப்படவில்லை. ஆசிரியர்கள் விளக்கங்களை அளித்து, ஸ்லைடுகளைக் காட்டி,  பாடம் கற்பிக்கிறார்கள். ரசாயன எதிர்வினைகளின் வீடியோக்களையும் பதிவு செய்கிறார்கள், இதனால் எங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்," கனிஷ்க் கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News