மருத்துவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுமா? மரணத்தை கணிக்கும் AI தொழில்நுட்பம்

Artificial Intelligence Research On Death: நோயாளியின் மரணத்திற்கான வாய்ப்புகளை நிபுணர்களால் கூட கணிக்க முடியாது, ஆனால் தொழில்நுட்பத்தால் முடியாதது என ஒன்று உண்டா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2023, 05:04 PM IST
  • மரணத்தைக் கணிக்க முடியுமா?
  • சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கும் தொழில்நுட்பம்
  • செயற்கை நுண்ணறிவின் வீச்சு
மருத்துவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுமா? மரணத்தை கணிக்கும் AI  தொழில்நுட்பம் title=

Prediction Of Death: நோயாளியின் மரணத்திற்கான வாய்ப்புகளை நிபுணர்களால் கூட கணிக்க முடியாது, ஆனால் அசாத்தியங்களை சாத்தியமாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் முடியாதது என ஒன்று உண்டா?  கிரவுண்டிங் AI கருவி நோயாளிகளின் இறப்புக்கான வாய்ப்புகளை முன்னறிவிக்கிறது என்ற தகவல் ஆச்சரியமளிக்கிரது.

உலகம் முழுவதும் மருத்துவர்கள் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கான அவர்களின் கடின உழைப்பு மற்றும் உந்துதல் ஆகியவை பிரமிப்பை ஏற்படுத்துகின்றன, மேலும் சில கலாச்சாரங்களில், மருத்துவர்கள் 'வாழும்' தெயவங்களாக மதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், ஒரு நோயாளியின் மரணத்திற்கான வாய்ப்புகளை பல ஆண்டு அனுபவம் பெற்ற மருத்துவர்களால் கூட கணிக்க முடியாது.

ஆனால், NYU கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) கருவி அதைச் செய்வதற்கான திறனைக் கொண்டுள்ளது. என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி அறிக்கையின்படி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவி, மருத்துவர்களின் குறிப்புகளைப் படிப்பதிலும் நோயாளிகளின் இறப்பு அபாயம், மருத்துவமனைக்குத் திரும்புதல் மற்றும் அவர்களின் கவனிப்பு தொடர்பான பிற முக்கிய விளைவுகளை துல்லியமாக கணிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, நம்பிக்கைகளை துளிர்க்கச் செய்துள்ளது.

மேலும் படிக்க | வரப்பில் டிம்பர் மரங்கள்... வயலில் பாரம்பரிய நெல் ரகங்கள்...வளம் தரும் விவசாயம்!

NYUTron மென்பொருள்
NYUTron என அழைக்கப்படும் இந்த மென்பொருள் தற்போது நியூயார்க்கில் உள்ள NYU உடன் இணைந்த மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அற்புதமான கருவியின் பின்னால் உள்ள குழு,இந்த கருவி ஒரு நாள் சுகாதார நடைமுறைகளின் நிலையான அங்கமாக மாறும் என்று நம்புகிறது.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இந்த AI கருவியின் முன்கணிப்பு திறன்களை எடுத்துக்காட்டுகிறது. NYU இன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் கணினி விஞ்ஞானியுமான எரிக் ஓர்மன், மருத்துவத்தில் முன்கணிப்பு மாதிரிகள் சில காலமாக இருந்தாலும், தேவையான தரவை ஒழுங்கமைத்தல் மற்றும் வடிவமைப்பதில் உள்ள சவால்கள் காரணமாக அவை பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

இருப்பினும், மருத்துவர்கள் தங்கள் மருத்துவ அவதானிப்புகள் மற்றும் நோயாளிகளின் தொடர்புகள் பற்றிய விரிவான குறிப்புகளை தொடர்ந்து எழுதுவதை குழு உணர்ந்தது. இது, குழுவின் கூற்றுப்படி, முன்கணிப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கற்கு, மருத்துவர்களின் தரவுகளே அடிப்படை ஆதாரமாக இருக்கும்.  

"எங்கள் அடிப்படை நுண்ணறிவு என்னவென்றால், மருத்துவக் குறிப்புகளை நமது தரவு ஆதாரமாகக் கொண்டு தொடங்கி, அதன் மேல் முன்கணிப்பு மாதிரிகளை உருவாக்கலாமா?" என கேள்விகளை விஞ்ஞானி எரிக் ஓர்மன் எழுப்புகிறார்.

மேலும் படிக்க | மனிதர்களின் இடத்தை நிரப்பும் செயற்கை நுண்ணறிவு! விமானத்தை இயக்க AI தொழில்நுட்பம்

NYUTron அடிப்படையில் ஒரு பெரிய மொழி மாதிரி. இதைப் பயிற்றுவிக்க, ஜனவரி 2011 மற்றும் மே 2020 க்கு இடையில் NYU லாங்கோன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 387,000 நோயாளிகளின் சுகாதாரப் பதிவுகளிலிருந்து மில்லியன் கணக்கான மருத்துவக் குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

இந்த குறிப்புகள் மருத்துவர்களால் எழுதப்பட்ட பல்வேறு வகையான பதிவுகளை உள்ளடக்கியது, இதில் முன்னேற்றக் குறிப்புகள், கதிரியக்க அறிக்கைகள் மற்றும் வெளியேற்ற வழிமுறைகள் ஆகியவை அடங்கும், இதன் விளைவாக 4.1 பில்லியன் சொற்களின் பெரிய கார்பஸ் கிடைத்தது.

இந்தத் தரவைப் பயன்படுத்தி, மென்பொருள் கணிப்புகளைச் செய்தது, பின்னர் அவை உண்மையான விளைவுகளுக்கு எதிராக பின்னோக்கி மதிப்பீடு செய்யப்பட்டன.

மென்பொருள் எதிர்கொள்ளும் சவால்

மென்பொருள் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க சவால்களில் ஒன்று, மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் மாறுபட்ட இயற்கை மொழியை விளக்குவதாகும், இது பெரும்பாலும் தனிப்பட்ட சுருக்கங்கள் மற்றும் குறிப்புகளை உள்ளடக்கியது.

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு!

கணிப்பு நிஜமானது

ஈர்க்கக்கூடிய செயல்திறனை வெளிப்படுத்திய NYUTron, டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு மருத்துவமனையில் இறந்த 95 சதவீத நோயாளிகளை சரியாகக் கண்டறிந்து, 80 சதவீத நோயாளிகள் 30 நாட்களுக்குள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கணித்துள்ளது.

மேலும், NYUTron 79 சதவீத நோயாளிகள் தங்கியிருக்கும் உண்மையான கால அளவை துல்லியமாக மதிப்பிட்டுள்ளது, காப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்ட 87 சதவீத வழக்குகளை சரியாகக் கண்டறிந்தது, மேலும் 89 சதவீத நோயாளிகள் தங்கள் முதன்மை நோயுடன் கூடிய கூடுதல் நிலைமைகளைக் கொண்டிருந்த வழக்குகளில் 89 சதவீதத்தை துல்லியமாக அங்கீகரித்துள்ளது.

இது பெரும்பாலான மருத்துவர்களின் கணிப்புகளை விஞ்சியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள AI அல்லாத கணினி மாதிரிகளின் மதிப்பீடுகளையும் விட மிகவும் அதிகமானது.

மருத்துவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுமா?
இந்த கேள்விக்கு கண்டிப்பாக இல்லை என்ற பதில் ஆச்சரியம் அளிக்கிறது. உண்மையில், இந்த கருவி ஆய்வில் நன்றாக செயல்படவும், மதிப்பீடுகளை துல்லியமாக கொடுக்கவும் காரணம், அது மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவரால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டது தான். மருத்துவர், இந்த கருவியின் மாதிரியின் கணிப்புகளின் முடிவுகளுக்கு தேவையான தரவுகளை துல்லியமாக, தனது அனுபவத்தின் அடிப்படையில் அளித்தார்.  

மருத்துவர்-நோயாளி உறவை AIயால் ஒருபோதும் மாற்ற முடியாது என்று ஓர்மன் வலியுறுத்தினார். அதற்குப் பதிலாக, NYUTron போன்ற AI கருவிகள் "மருத்துவர்களுக்கான கூடுதல் தகவல்களை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள் என்ற அளவில், தடையின்றி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அதனால் அவர்கள் மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க முடியும்" என்று அவர் கூறுகிறார்.

மேலும் படிக்க | AI இறந்தவர்களை மீண்டும் ’சிந்திக்க’ உயிர்ப்பிக்கும் செயற்கை நுண்ணறிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News