பாகிஸ்தானைப் போல வருமா? லாகூரில் இந்திய காங்கிரஸ் தலைவரின் சர்ச்சைப் பேச்சு!

Manishankar Aiyer Speech In Pakistan: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர், இந்திய பிரதமரை வெளிநாட்டில் அவதூறாக பேசுவது, சரியா? எழும் கேள்விகளும் பின்னணியும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 12, 2024, 10:47 PM IST
  • இந்தியப் பிரதமரை வெளிநாட்டில் அவதூறாக பேசும் காங்கிரஸ்
  • லாகூரில் பிறந்தவர் மணிசங்கர் ஐயர்
  • பாகிஸ்தானைப் போல நண்பர்கள் யாருமில்லை!
பாகிஸ்தானைப் போல வருமா? லாகூரில் இந்திய காங்கிரஸ் தலைவரின் சர்ச்சைப் பேச்சு! title=

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மணிசங்கர் அய்யர், பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தெற்காசியாவின் முக்கிய நாடுகளான ஒன்றான பாகிஸ்தானை பாராட்டிய இந்தியர், பாகிஸ்தானைப் போன்ற பண்பு நிறைந்த நாட்டில் தனக்குக் கிடைத்த வரவேற்பு வேறு எங்கும் கிடைத்ததில்லை என்றும் சிலாகித்து பேசினார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர், இந்திய பிரதமரை வெளிநாட்டில் அவதூறாக பேசுவது, பாகிஸ்தானியர்களுக்கு மகிழ்ச்சியாக இருகும் என்று சொன்னாலும், இந்தியாவிற்கு கசப்பை தூண்டும் வெறுப்புப்பேச்சாகவே, காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் ஐயரின் பேச்சு பார்க்கப்படுகிறது. 

"எதிர் தரப்பினர் எப்படி நடந்துக் கொள்கிறார்களோ, அப்படியே அதை பிரதிபலிக்கும் மக்களாகவே பாகிஸ்தானியர்கள் இருக்கின்றனர். நாம் நட்பாக இருந்தால், அவர்கள் நம்மைவிட நட்பாக இருப்பார்கள், நாம் விரோதமாக இருந்தால், அவர்கள் விரோதப் போக்கின் எல்லையையே கடந்து விடுவார்கள்" என்று மணிசங்கர் ஐயர் தெரிவித்ததாக, டான் நாளிதழில் செய்தி வெளியாகி அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்..

நேற்று (சனிக்கிழமை பிப்ரவரி 11) லாகூரில் உள்ள அல்ஹம்ராவில் ஃபைஸ் திருவிழாவின் இரண்டாவது நாளான "Hijr Ki Rakh, Visaal Kay Phool, Indo-Pak Affairs” என்ற தலைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரங்கள் என பேசிய மணிசங்கர் ஐயரின் கருத்துக்களுக்கு பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கராச்சியில் தான் பணியாற்றியதை நினைவுக்கூர்ந்த மணிசங்கர் ஐயர், தான் பாகிஸ்தானில், இந்தியத் தூதராக பணியாற்றிய காலத்தை நினைவு கூர்ந்தார். பாகிஸ்தானில், தன்னையும், தனது மனைவியையும் நன்றாக நடத்தியதைப் பற்றி பேசிய மணிசங்கர் ஐயர், இந்த நிகழ்வுகளைப் பற்றி "ஒரு மாவீரரின் நினைவுகள்" என்று எழுதியிருக்கிறார்.

மணிசங்கர் ஐயர், லாகூரில் பிறந்தவர் என்பதும், 1978 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தபோது, கராச்சியில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாத இந்திய துணை உயர் ஆணையத்தின் அலுவலகத்தில், அந்த நாட்டிற்கான இந்தியாவின் முதல் தூதரக ஜெனரலாக நியமிக்கப்பட்டார் . 

மேலும் படிக்க | பிரதமர் மோடி OBC சமூகமா... இல்லையா...? - பாஜக, காங்கிரஸ் சொல்வது என்ன?

1982 வரை பாகிஸ்தானில் இருந்து பணியாற்றிய மணிசங்கர் ஐயர், இந்தியர்கள் கற்பனை செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நாடாக பாகிஸ்தான் இருப்பதாக கூறுகிறார். 

இவ்வாறு பாகிஸ்தான் ஊடகத்தில் வெளியான செய்திகளின்படி, ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து தற்போது இரு நாடுகளாக பிரிந்திருக்கும் அண்டை நாடுகள் இடையே நல்லிணக்கம் தேவை என்று ஐயர் கூறினார், ஆனால் நல்லெண்ணத்திற்கு பதிலாக, கடந்த பத்து ஆண்டுகளாக (நரேந்திர மோடி அரசாங்கம் அமைந்ததிலிருந்து) உறவுகள் சுமூகமாக இல்லை என்று மணிசங்கர் ஐயர், இந்திய அரசு குறித்து பாகிஸ்தானின் லாகூரில் பேசியிருக்கிறார்.

இந்தியப் பிரதமரைப் பற்றி லாகூரில் பேசிய மணிசங்கர் ஐயர், "பாகிஸ்தான் மக்களிடம் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான். எங்கள் நாட்டின் பிரதமர் மோடி ஒருபோதும் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றதில்லை, ஆனால் அவருக்கு மூன்றில் இரண்டு பங்கு இருக்கைகள் உள்ளன. மக்களின் வாக்குகளின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பங்கு பாகிஸ்தானியர்கள் உங்களை அரவணைக்கக் காத்திருக்கின்ரானர் என்று தெரிவித்தார். 

மேலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாதது பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய தவறு என்று தெரிவித்த மணிசங்கர் ஐயர், இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு சேனல்களை திறப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | PM Modi: இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் நேரு... மாநிலங்களவையில் பிரதமர் மோடி கடும் தாக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News