இஸ்ரேல் காசா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அன்மைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், காசாவில் உள்ள பொதுமக்களுக்கான, உணவு பொருட்கள், தண்ணீர், எரிசக்தி, மருந்துகள் போன்ற மனிதாபிமான அடிப்படையில் ஆன உதவி பொருட்களை, இஸ்ரேல், இனி காசாவின் வடகிழக்கு பகுதி வழியாக அனுப்பும் என, இஸ்ரேலின் போர் தொடர்பான கேபினட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்பகுதியில் ஹமாஸ் குழுவின் நான்கு படை பிரிவுகள்
தற்போது வரை, கரீம் ஷலோம் என்னும் எல்லை பகுதி, எகிப்தின் ரஃபான் க்ரோசிங் எல்லைப் பகுதி வழியாக மனிதாபிமான உதவி பொருட்கள் அனுப்பப்பட்டன. இரண்டுமே காசாவின் தென் பகுதியில் உள்ள நிலையில், அந்த பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், பொது மக்களுக்கான உணவுப் பொருட்கள் தண்ணீர், மருந்துகள், எரிபொருட்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதாக தொடர்ந்து கூறப்பட்டது. தென்பகுதியில் ஹமாஸ் குழுவின் நான்கு படை பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸுக்கு உதவ வேண்டாம் என கோரிக்கை
காசா பகுதியில் உள்ள மக்களுக்கு அனுப்பும் உணவுப் பொருட்களும், பிற உதவிகளும், ஹமாஸுக்கு செல்வதாகவும், இதனால் இதை அனுப்பக் கூடாது எனவும் இஸ்ரேல் நாட்டில், பலர் போராடி வருகின்றனர். ஹமாஸிக்கு உதவ வேண்டாம் என்று, உதவிப் பொருட்கள் எடுத்துச் செல்லும் டிரக்குகளை, போராட்டக்காரர்கள் வழிமறித்தனர்.
மேலும் படிக்க | $500 மில்லியனுக்கும் அதிகமான கடன்! திவாலாகிறாரா அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்?
பிணை கைதிகளை விடுவிக்க தொடர்ந்து நடவடிக்கை
எனினும், காசா பகுதி மக்களுக்கு உதவி பொருட்கள் அனுப்பபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரதமர் நெத்தென்யாகு, காசா பகுதியில் உள்ள பினை கைதிகளை விடுவிப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று கூறுகிறார். கடந்த அக்டோபர் மாதம் ஏழாம் தேதி, காசா எல்லைப் பகுதியில், தீவிரவாத குழுவினர் நடத்திய கொடூர தாக்குதலில், சுமார் 1200 பேர் இறந்தனர். 240 இஸ்ரேல் நாட்டவர் மற்றும் வெளிநாட்டவர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதில் ஏற்கனவே 31 பேர் இறந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மீதமுள்ள 134 பிணை கைதிகளை விடுவிக்க, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய மோதலில் 24,100 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸை முழுவதுமாக ஒழித்துக் கட்டும் வரை போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர்
காசா பகுதியில் ஹமாஸை முழுவதுமாக ஒழித்துக் கட்டும் வரை, போர் தொடரும் என்று அறிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர், போர் முடிந்தபின் காசா பகுதியின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், சிவில் விவகாரங்களில், இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும் என்றும், வருங்கால தாக்குதலை தவிர்க்க காசா முழுவதும் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஹமாஸ் இஸ்ரேல் போருக்கு மத்தியில், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஈரான்! இருவர் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ