டோக்கியோ: ஜப்பானின் ஏர்லைன்ஸில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது பயணிக்களுக்கான வசதியை மேம்படுத்தும் திட்டம். இந்தத் திட்டம் பொருளாதாரரீதியாகவும் நல்ல பயனளிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது பயணிகள், ஜப்பான் ஏர்லைன்ஸில் பயணிக்கும்போது ஆடைகளை சுமந்து வரவேண்டாம். அவர்களுக்கு தேவையான ஆடைகளை ஏர்லைன்ஸ் கொடுக்கும்.
ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மையான செய்தி தான். ஆடைகளை வாடகைக்கு கொடுக்கும் புதிய திட்டத்தின்படி, பயணிகள் தங்களுக்கு தேவையானஆடை வகை, சீசன், உடை மற்றும் பிக் அப் மற்றும் திரும்பும் தேதிகள் உட்பட பல்வேறு விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.
விடுமுறை நாட்களை உல்லாசமாக கழிக்க செல்லும் பயணங்கள் உற்சாகத்தை கொடுக்கும் அதேவேளையில் பல பொறுப்புகளையும் கொடுப்பதால் மன அழுத்தமும் ஏற்படும். வேலையில் இருந்து சிறிது ஓய்வு எடுப்பதற்காக செல்லும்போது, பயண ஏற்பாடுகள், லக்கேஜ்களை கையாளுதல் என மன அழுத்தம் ஏற்படுகிறது.
இந்த விஷயத்தில் பயணிகளுக்கு உதவுவதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸ் கொண்டு வந்திருக்கும் ஒரு வருட கால பைலட் சேவை இது. பயணிகள், டிக்கெட் பதிவின்போதே தங்களுக்கு தேவையான ஆடைகளையும் பதிவு செய்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | மத அடையாளங்களுக்கு NO! பிரான்ஸ் பள்ளிகளில் இஸ்லாமிய ஆடை அபாயா அணிவதற்கு தடை
ஜப்பானின் ஃபிளாக்ஷிப் கேரியர் மூலம் பயணிக்கும் பயணிகள், தங்களுடைய விடுமுறையை கழிக்க ஆடைகள் வாடகைக்கு கொடுக்கும் தெரிவின்படி, ஆடை வகை, சீசன், உடை மற்றும் பிக் அப் மற்றும் திரும்பும் தேதிகள் உட்பட பல்வேறு விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.
வாடகைக்கு ஆடை வேண்டும் என்று முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், தங்கள் ஹோட்டலுக்கு வந்தவுடன் அவர்களுக்கு ஆடைகள் வழங்கப்படும். இந்தச் சேவைக்கு, $34 முதல் $48 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
Any wear, Anywhere service
'எனி வியர், எனிவேர்' (Any wear, Anywhere service) என்ற இந்த சேவை இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் 2024 வரை அமலில் இருக்கும். முன்பதிவு, விநியோகம் மற்றும் சலவை ஆகியவற்றைக் கையாளும் ஜப்பானிய நிறுவனமான சுமிடோமோவில் பணிபுரியும் மிஹோ மோரியா இந்த யோசனையை முன்வைத்தார்.
பொருட்களை கையாள்வது தொடர்பான தனது பயம்தான் இந்தத் திட்டத்தை கொண்டு வரத் தூண்டியது என்று அவர் கூறுகிறார். பயணம் செய்வதற்கு எனக்குக் மிகவும் பிடிக்கும். பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன், ஆனால் சாமான்களை கொண்டு செல்வது மற்றும் வெளிநாட்டில் சலவை செய்வது என்பது எப்போதும் எனக்கு பயத்தைக் கொடுத்தது. இந்த பயம் தொடர்பான எனது யோசனை தான் Any wear, Anywhere திட்டத்தின் அடிப்படை என்று மிஹோ மோரியா கூறுகிறார்.
தனது யோசனையை ஆதரிக்கும் விமான நிறுவனத்தைக் கண்டுபிடிக்க "பல முயற்சிகள்" எடுத்ததாக கூறும் மோரியா, யோசனை அங்கீகரிக்கப்பட்டாலும் தொற்றுநோய் காரணமாக, அதை செயல்படுத்துவது பின்னுக்குத் தள்ளப்பட்டது என்று கூறுகிறார்.
தற்போது தனது யோசனை செயல்படுத்தப்பட்ட நிலையில், காலப்போக்கில்பிற விமான நிறுவனங்களுக்கும் இந்தச் சேவையை விரிவுபடுத்த முடியும் என அவர் நம்புகிறார்.
மேலும் படிக்க | தயவு செய்து ஆடையை அவிழ்க்க வேண்டாம், இது டெக்னோ பரேட்! வேண்டுகோள் விடுத்த போலீஸ்
திட்டத்திற்கு ஆதரவு இருக்குமா?
இந்தத் திட்டம் ஷாப்பிங்கைக் குறைக்க உதவும். பயணம் மேற்கொள்ளும் பலர் ஷாப்பிங் செய்கின்றனர். அதிலும் குறிப்பாக விடுமுறைக்காக வாங்கப்படும் ஆடைகள் பெரும்பாலும் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தப்படுப்வதில்லை என்பதால், அவை அலமாரிகளில் அடைக்கலமாகிவிடுகின்றன. அதன்பிறகு, அடுத்த விடுமுறைக்கு வெளியே செல்லும்போது, மீண்டும் பயன்படுத்திய ஆடைகளையே பயன்படுத்த பலரும் விரும்புவதில்லை.
வாடகைக்கு ஆடை திட்டத்தின் மூலம், நேரமும் பணமும் மிச்சமாகிறது. ஏதேனும் உடைகள், எங்கும் சேவையின் கீழ் உள்ள ஆடைகள், சொந்தமானவை அல்லது நிறுவனத்தின் அதிகப்படியான ஸ்டாக்கில் இருந்து பெறப்பட்டவையாக இருக்கும். வாடகைக்கு கொடுக்கப்பட்ட ஆடைகள், சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும், இது சேவையை நிலையானதாக மாற்ற உதவுகிறது.
கூடுதலாக, பயணிகள் தங்கள் சாமான்களை வீட்டிலேயே விட்டுச் செல்வதால், விமானத்தில் கொண்டு செல்லப்படும் எடை குறையும். இதனால் எரிபொருள் மற்றும் உமிழ்வைச் சேமிக்க உதவும்.
இந்த முன்முயற்சியானது JAL இன் விமானங்களில் சுமந்து செல்லும் எடையைக் குறைப்பதன் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாமான்களில் சுமார் 22 பவுண்டுகள் (10 கிலோ) சேமிப்பது என்பது, உமிழ்வில் சேமிக்கப்படும் தோராயமாக 16.5 பவுண்டுகள் (7.5 கிலோ) சமம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு வரும் பயணிகள் புதிய சோதனைத் திட்டத்தின் மூலம் குறைந்த லக்கேஜுடன் பயணம் செய்யலாம். ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்தத் திட்டம் குறைந்தது 13 மாதங்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | ஆடையே அணியாத கிராம பெண்கள்... அதுவும் மழைக்காலத்தில் - ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ