அமெரிக்க எம்பயர் கட்டடத்தின் பரம ரகசியம்...! நாணயம் உயிரை கொல்லுமா?

அமெரிக்கன் எம்பயர் பில்டிங் மீது நாணயம் ஒன்றை போட்டால், அது கீழே விழும்போது யார் மீதும் பட்டால் அவர் உயிரிழந்துவிடுவார் என கூறப்படுகிறது. நீண்டகாலமாக நம்பப்படும் இந்த தகவலின் உண்மை தன்மையை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 22, 2023, 09:18 PM IST
அமெரிக்க எம்பயர் கட்டடத்தின் பரம ரகசியம்...! நாணயம் உயிரை கொல்லுமா? title=

உலகம் முழுவதும் ஆண்டு ஆண்டு காலமாக சொல்லப்படுகிற சில செவிவழி கதைகள் உண்டு. அதற்கு ஆதாரம் ஏதும் இருக்காது என்றாலும், அந்தக் கதைகள் மக்கள் உண்மையென காலங்காலமாக நம்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படியான ஒரு கதை தான், அமெரிக்காவின் ஸ்டேட் எம்பயர் (Empire State Building) கட்டடத்தின் உச்சியில் இருந்து ஒரு நாணயத்தை கீழே போட்டால், அப்போது கீழே இருப்பர்கள் நிச்சயம் மரணித்துவிடுவார்கள் என சொல்லப்பட்டது. 

மேலும் படிக்க | ஆச்சர்ய தகவல்! பாகிஸ்தானில் உள்ள சில ‘இந்து’ அதிர்ஷ்டசாலிகள்!

பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை இப்படியான செய்தியை இன்னும் அங்கு நம்பிக் கொண்டிருப்பவர்கள் உண்டு. அதனால், அமெரிக்காவின் ஸ்டேட் எம்பயர் கட்டடத்தின் அருகில்கூட செல்வதற்கு மக்கள் அஞ்சியுள்ளனர். இதனைக் கேள்விபட்ட வெர்ஜீனியாவைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் லூயிஸ் ப்ளூம்ஃபீல்ட், இந்த செய்தி உண்மையா? என கள ஆய்வு செய்ய முடிவெடுத்தார்.

ஹீலியம் பலூன் ஒன்றில் சில காயின்களை வைத்து அமெரிக்க எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சிக்கு பறக்க விட்டார். பின்னர் அந்த பலூனை வெடிக்க வைத்து, அதில் இருந்த காயின்களை கீழே விழவைத்து அதன் அடியில் இருந்து நேரடியாக விழும் காயின்களை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது, அந்த காயின்கள் எதுவும் அவரை காயப்படுத்தவில்லை. சில காயின்கள் கீழே விழும் வேகத்தில், ஆலங்கட்டிகளால் தாக்கப்படுவதுபோல் இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்த ஆய்வுக்குப் பிறகு என்னை நினைத்து நானே சிரித்துக் கொண்டேன் எனக் கூறிய அவர், இது ஒரு கட்டுக்கதை என தெரிவித்தார்.

மேலும் படிக்க | மக்கள்தொகையை அதிகரிக்க திட்டம் போடும் நாடு! 30 நாள் சம்பளத்துடன் திருமண விடுப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News