NATO படையிலிருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு!

சர்வதேச ராணுவமான நேட்டோ படையில் இருந்து விலகும், அதிபர் டிரம்ப்-ன் முடிவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

Last Updated : Jan 23, 2019, 05:31 PM IST
NATO படையிலிருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு! title=

சர்வதேச ராணுவமான நேட்டோ படையில் இருந்து விலகும், அதிபர் டிரம்ப்-ன் முடிவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ராணுவமான ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் அமைதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்க விலகுவதை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப் முடிவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

அதாவது ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா விலக கூடாது என 357 உறுப்பினர்களும், விலகலாம் 22 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். 

Trending News