மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறதா? தயாராகும் மேற்கத்திய நாடுகள்...!

மூன்றாம் உலக போரை உலக நாடுகள் எதிர் கொண்டிருப்பதாக நேட்டோ அச்சம் தெரிவித்துள்ளது. அத்துடன் படைகளை திரட்டவும், ராணுவ பலத்தை அதிகரிக்கவும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 5, 2024, 05:44 PM IST
  • மூன்றாவது உலகப் போர் விரைவில்
  • தயாராகும் உலக நாடுகள்
  • நேட்டோ அமைப்பு பகிங்க எச்சரிக்கை
மூன்றாம் உலகப் போர் தொடங்கப் போகிறதா? தயாராகும் மேற்கத்திய நாடுகள்...! title=

இஸ்ரேல்-ஹமாஸ் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் மத்தியில் மூன்றாம் உலகப் போர் அச்சம் எழத் தொடங்கியுள்ளது. ஆயுதம் ஏந்துவதற்கு தயாராக இருக்குமாறு பிரிட்டன் இராணுவத் தளபதி மக்களை முறைப்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் ஜெர்மனி ராணு பலத்தை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. நேட்டோ ஏற்கனவே போர் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம். 

மூன்றாம் உலகப் போர் அச்சம் எழக் காரணம் கடந்த வாரம், பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் பேசும்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியாவுடன் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார். அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் சக்தி வாய்ந்த அமைப்பான நேட்டோ மூன்றாம் உலகப் போருக்கான பயிற்சிகளை தொடங்கப் போவதாக அறிவித்தது. ஜேர்மனியின் போர்த் திட்டமும் கசிந்துள்ளது. இது உலகப் போருக்கான ஆயுதங்களைக் குவிப்பதைக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்கத்திய நாடுகள் ஏன் இத்தகைய தயாரிப்புகளைச் செய்கின்றன? அடுத்த சில ஆண்டுகளில் உண்மையில் மூன்றாம் உலகப் போர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவுடன் நெருங்கும் அண்டை நாடு! சீனாவிற்கு கடுப்பேற்றும் இலங்கை அரசியல்வாதிகள்!

உக்ரைனை ரஷ்யா தாக்குவது போல், மேற்கத்திய நாடுகளையும் தாக்கலாம் என நேட்டோ அஞ்சுகிறது. இதை சமாளிக்க, ராணுவ வீரர்களை உடனடியாக நியமிக்கவும், பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கவும் அனைத்து நாடுகளுக்கும் நேட்டோ வேண்டுகோள் விடுத்துள்ளது. நேட்டோ அதிகாரிகள் சமீபத்தில், எங்களுக்கு ஒரு சிவிலியன் இராணுவம் மிகவும் தேவைப்படுவதாகவும், அது சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஆயுதங்களை எடுக்கக்கூடியதாக தயாராக இருக்கும் என கூறினார். மறுபுறம், ஜேர்மன் உளவுத்துறை ஆவணங்கள் லீக்கானதில், ஜெர்மனி மூன்றாம் உலகப் போருக்கான போர்த் திட்டங்களை வகுத்து வருவதாகத் தெரியவந்துள்ளது. ரஷ்ய துருப்புக்கள் பெலாரஸிலிருந்து மேற்கு நோக்கி நகரக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க ஆயுதங்கள் மிகவும் முக்கியம்.

ஜெர்மன் நியூஸ் பேப்பர் பில்டில் வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள் அந்நாட்டின் ஆயுதப்படைகள் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு கூட்டு தாக்குதலுக்கு தயாராகி வருவதை வெளிப்படுத்தியுள்ளது. ஆவணங்களின்படி, சுவால்கி கேப் என்ற பகுதியை ரஷ்யா கைப்பற்ற விரும்புகிறது. இதற்காக, நேட்டோவின் பயத்தை காரணம் காட்டி, இந்த பகுதியில் குண்டுகளை வீச முடியும். சுவால்கி கேப் என்பது பெலாரஸ் மற்றும் கலினின்கிராட் இடையே அமைந்துள்ள போலந்து-லிதுவேனியன் பகுதியாகும். லீக்கான ஆவணத்தில் 30,000 ஜேர்மன் வீரர்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறுகிறது. தி கார்டியன் பத்திரிகையின் அறிக்கையின்படி, ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், ரஷ்யா எந்த நாளும் நேட்டோ நாடுகளைத் தாக்க முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஐந்து முதல் எட்டு ஆண்டுகளுக்குள் இது நடக்கும் அபாயம் உள்ளது என கூறியிருப்பது தெரியவந்துள்ளது.

பிரிட்டன் மக்கள் எதிர்காலத்தில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராக வேண்டும் என்று பிரிட்டன் இராணுவத் தளபதி சர் பேட்ரிக் சாண்டர்ஸ் கூறியிருக்கிறார். அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும், ஏனெனில் அது தேவைப்படும் என கூறியுள்ளார். அதேபோல், பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ் கடந்த ஆண்டு போர் நெருங்கி வருவதாக எச்சரித்திருந்தார். இன்னொருபுறம், நிலைமைகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் நேட்டோ, அடுத்த சில ஆண்டுகளில் உலகப் போர் நிச்சயம் என்பதை ஆணித்தரமாகவும், அச்சத்துடன் கூறியுள்ளது.

இந்த போர் அணு ஆயுத போராக மாறி உலகையே அழித்துவிடும். இதற்கான ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன என்று நேட்டோ செயலாளர் கூறினார். எனவே முன் தயாரிப்பு தேவை என நேட்டோ அறிவுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய ராணுவ வீரர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணியை தொடங்க பிரிட்டன் தயாராகி வருகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு சிவில் இராணுவத்தை உருவாக்கும் திட்டத்திலும் செயல்படுகிறது. மறுபுறம், ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய பின்னர், ஈரானிய பினாமிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இது ஒரு உலகப் போரைத் தூண்டலாம். ஏனென்றால் ஈரான் சீனாவிடம் இருந்து மறைமுக ஆதரவைப் பெறுகிறது. இந்த சூழல்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது, உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உலகம் இருப்பதை அறிய முடிகிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட இதே ஆமோதித்துள்ளார். 

நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு ஆகும். 1949-ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து இந்த கூட்டமைப்பை தொடங்கின. அதில் தற்போது 31 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடுகள் உதவிக்கு வர அவை ஒப்புக் கொண்டுள்ளன. ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட திரட்டப்பட்ட அமைப்பும் கூட.

மேலும் படிக்க | Grammy: கிராமி விருது வென்ற SHAKTI ஆல்பம்! இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்த சங்கர் மகாதேவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News