நித்தியானந்தா விடு தூது... சீன அதிபரிடம் நட்பு கரம் நீட்டும் கைலாசா அதிபர்!

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த, நித்யானந்தா, தற்போது இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் சீனாவுடன் கை கோர்க்க முயற்சி செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2023, 05:01 PM IST
  • தனி வங்கி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றைக் கொண்ட கைலாசா என்ற நாட்டை நிறுவிய நித்தியானந்தா.
  • ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக கக்கப்பட்ட விஷம்.
  • கைலாசா நாட்டின் தலைவராகவும், நித்யானந்த பரமசிவம் ஆண்டவராகவும் உள்ள நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நித்தியானந்தா விடு தூது... சீன அதிபரிடம் நட்பு கரம் நீட்டும் கைலாசா அதிபர்! title=

குய்டோ/பெய்ஜிங்: ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த, நித்யானந்தா, தற்போது இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் சீனாவுடன் கை கோர்க்க முயற்சி செய்யும் வேலையில் இறங்கியுள்ளார். இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நித்யானந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி கைலாசா நாட்டின் சார்பில் சீனாவுக்கும் அதிபர் ஜின்பிங்கிடம் நட்பு கரம் நீட்டியிருக்கிறார் நித்யானந்தா. சீன மக்கள் பொருளாதார வளம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை அடைய வேண்டும் என வாழ்த்தினார் நித்யானந்தா. சீன அதிபருக்கு செய்தி அனுப்புவதன் மூலம் இந்தியாவை குறிவைக்க நித்யானந்தா விரும்புவதாக நம்பப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மூன்றாவது முறையாக பதவி ஏற்றுள்ள நிலையில், கைலாசா நாட்டின் தலைவராகவும், நித்யானந்த பரமசிவம் ஆண்டவராகவும் உள்ள நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நித்யானந்தா ட்வீட் செய்துள்ளார். வெற்றிகரமான பதவிக்காலம் அமைய வாழ்த்துகள். உங்களது மகத்தான தேசத்திற்கும், அதன் மக்களுக்கும், கைலாசத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நான் எதிர்நோக்குகிறேன். சிவபெருமான் சீன மக்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு பொருளாதார செழிப்பு, அமைதி, அன்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக கக்கப்பட்ட விஷம்

பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடிய நித்யானந்தா, இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையில் நித்யானந்தாவின் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கினார். நித்யானந்தாவின் இந்த பிரதிநிதியின் பெயர் விஜயப்ரியா. ஐக்கிய நாடுகள் சபையில் கைலாசா நாட்டின் நிரந்தர பிரதிநிதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் தனது அறிக்கையில், 'இந்து மதத்தின் பாரம்பரியங்கள் மற்றும் வாழ்க்கை முறையை முன்னெடுத்துச் செல்வதற்காக, இந்தியாவில் இந்துக்களின் உச்ச தலைவர் (நித்யானந்தா) துன்புறுத்தப்படுகிறார். அவரது மனித உரிமைகள் மீறப்படுகின்றன' என்று கூறியிருந்தார்.

நித்தியானந்தாவின் ட்வீட் 

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ஜெனிவாவில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழுவின் முன்னிலையில் விஜயபிரியா இதனைத் தெரிவித்தார். நித்யானந்தா தலைமறைவானவர் அல்ல என்றும், நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் விஜயபிரியா கூறினார். நித்யானந்தாவுக்கு போதனைகள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதைத் தடுக்க கமிட்டியின் உதவியையும் நாடினார்.

இந்துக்களின் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பழக்கவழக்கங்களை மீண்டும் உயிர்ப்பித்து வரும் இந்துக்களுக்கான முதல் இறையாண்மை கொண்ட நாடு கைலாசா நாடு என்றும் அவர் கூறினார். ஒரு சீடரை பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நித்யானந்தா நாட்டை விட்டு ஓடிவிட்டார். பின்னர் அவர், தனி வங்கி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றைக் கொண்ட கைலாசா என்ற நாட்டை நிறுவினார். நித்யானந்தா வாங்கிய கைலாசா நாடு ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவு என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | 6 மாதங்களுக்கு ஒரு முறை நாட்டை மாற்றும் தீவு! 364 ஆண்டு கால நடைமுறை!

மேலும் படிக்க | Comfort Women: ’ஆறுதல் அளித்த’ பாலியல் அடிமைகளை உருவாக்கிய ஜப்பான்! அதிகார துஷ்பிரயோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News