ரஷ்யாவைப் போலவே போர் தொடுக்கத் தயாராகிறாரா கிம் ஜாங் உன்? அதிர்ச்சித் தகவல்!

Kim Jong Un Warning: வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலைப் பதவி நீக்கம் செய்ததுடன், போர் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளையும் முன்வைத்துள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2023, 05:09 PM IST
  • போருக்கு தயாராகும் கிம் ஜான் உங்
  • வட கொரிய உயரதிகாரியை பதவி நீக்கம் செய்த சர்வாதிகாரி
  • எதிரிகளை எதிர்கொள்ள போர்ப்பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
ரஷ்யாவைப் போலவே போர் தொடுக்கத் தயாராகிறாரா கிம் ஜாங் உன்? அதிர்ச்சித் தகவல்! title=

போர் மூளும் என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சமிக்ஞை கொடுத்திருப்பதாக சர்வதேச அளவில் பேசபப்டுகிறது. 
வட கொரியாவில் பொதுப் பணியாளர்களின் தலைவர் பாக் சு இல் "டிஸ்மிஸ்" செய்யப்பட்டார், அவருக்குப் பதிலாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரி யோங் கில் நியமிக்கப்படுகிறார். வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலைப் பதவி நீக்கம் செய்ததுடன், போர் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளையும் முன்வைத்துள்ளார்.

போர் தயாரிப்பில் ஈடுபட அறிவுறுத்திய கிம் ஜாங் உன், இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்தி, ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், கூடுதல் போர் ஆயத்தங்களைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக வடகொரியாவின் அரச ஊடகமான KCNA இன்று (வியாழக்கிழமை, ஆகஸ்ட் 10) தெரிவித்துள்ளது.

மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டத்தில் பேசிய வட கொரியாவின் உச்சத்தலைவர் கிம் ஜாங் உன் இந்த கருத்துக்களை வெளியிட்டார், அப்போது பேசிய அவர் எதிரிகள் என்று யாரின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், நாட்டின் எதிரிகளைத் தடுப்பதற்கான எதிர் நடவடிக்கைகளுக்கான திட்டங்களைப் பற்றி விவாதித்ததாக அறிக்கை கூறுகிறது.

வட கொரியாவின் உயர்மட்ட ஜெனரல், பொதுப் பணியாளர்களின் தலைவர் பாக் சு இல் சுமார் ஏழு மாதங்களாக இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலாக அரசாங்கத்தில் பணியாற்றி வந்தார். அவர்  தற்போது "டிஸ்மிஸ்" செய்யப்பட்டதாக KCNA தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | காதல் மனைவி சோஃபியை பிரிவதாக கனடா பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு!

முன்னதாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், துருப்புக்களின் உயர் தளபதியாகவும் இருந்த ஜெனரல் ரி யோங் கில், பாக் சு இல்-க்கு பதிலாக நியமிக்கப்பட்டார்.

ரி முன்பு ராணுவ தளபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 இல் அவர் மாற்றப்பட்டபோது, ​​ரியின் பதவி நீக்கம் மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளாதது அவர் தூக்கிலிடப்பட்டதாக வதந்திகளைத் தூண்டியது. இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, மற்றொரு மூத்த பதவிக்கு அவரது பெயர் முன்மொழியப்பட்ட பின்னர் அவர் மீண்டும் பொதுவெளியில் தோன்றினார்.

ஆயுத உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கான இலக்கையும் அண்மை கூட்டத்தில் கிம் முடிவு செய்தார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், வேறு மேலதிக விவரங்கள் எதையும் அந்த அறிக்கை தெரிவிக்காவில்லை. கடந்த வாரம் ஆயுத தொழிற்சாலைகளுக்குச் சென்ற கிம் ஜாங் உன், ஏவுகணை இயந்திரங்கள், பீரங்கி மற்றும் பிற ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சொன்னார்.

KCNA வெளியிட்ட புகைப்படங்களில், கிம் ஒரு வரைபடத்தில் சியோல் மற்றும் தென் கொரியாவின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளை சுட்டிக்காட்டுவதைக் காட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடகொரியா செப்டம்பர் 9ஆம் தேதி ராணுவ அணிவகுப்பை நடத்த உள்ளது. மேலும், பீரங்கி குண்டுகள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை உள்ளடக்கிய உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாக வடகொரியா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மற்றும் வடகொரியா இரண்டுமே மறுத்துள்ளன.

மேலும் படிக்க | பாகிஸ்தான் பொருளாதாரத்தில் சிறு நம்பிக்கைக்கீற்று! பங்குச்சந்தை காட்டும் அறிகுறி

இராணுவத்தை போருக்குத் தயார் நிலையில் வைத்திருக்க அந்நாட்டின் சமீபத்திய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு போர்ப் பயிற்சிகளை நடத்துமாறு கிம் ஜாங் உன்கேட்டுக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியா குடியரசு நிறுவப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பு செப்டம்பர் 9 ஆம் தேதி  நடைபெறுகிறது. நாட்டில் ஏராளமான துணை ராணுவக் குழுக்கள் உள்ளன, அவை அதன் இராணுவப் படைகளை வலுப்படுத்த பயன்படுத்துகின்றன.

 ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24 வரை அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவ ஒத்திகையை நடத்தவுள்ளன. வடகொரியா இந்த இரண்டு நாடுகளுக்கும் எதிர் மனோபாவத்தில் இருக்கும் நாடு என்பது குறிப்பிடத்தகக்து, 

(ஏஜென்சிகளின் உள்ளீடுகளுடன்)

மேலும் படிக்க | வேலையில்லையா? கவலை வேண்டாம்! ஏப்ரல் 1 முதல் உதவித்தொகை வங்கிக்கு வந்துவிடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News