முன்னாள் காதலிக்கு உயரிய பதவி வட கொரிய அதிபர்

Updated: Oct 11, 2017, 01:55 PM IST
முன்னாள் காதலிக்கு உயரிய பதவி வட கொரிய அதிபர்

வடகொரியாவில் பிரபல பாடகியாக வலம் வந்த ஹயோன் சாங் வோல் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் வீடியோ ஒன்றை தயார் செய்தார் என்ற குற்றத்திற்காக அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது.

ஆனால் ஓராண்டு கடந்த நிலையில் அவர் தேசிய தொலைக்கட்சியில் தோன்றி ஜனாதிபதி கிம் ஜோங் கிம் கலைத்துறைக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்து பேசி அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது கொரியா தொழிலாளர்கள் கட்சியில் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரம் படைத்த பதவியை பாடகி ஹயோன் சாங் வோல் பெற்றுள்ளார்.

இவர் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கிம் ஜோங் உடன் நெருக்கமாக பழகியுள்ளார். இவர்களது காதல் கிம் தந்தைக்கு தெரிய வர, அந்த உறவு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் கிம் ஜோங் வுன், தற்போது தமது முன்னாள் காதலியை கட்சியின் உயரிய பதவிக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.