பாகிஸ்தானில் மனித குண்டுவெடிப்பு தாக்குதல்... 42 பேர் பலி - பின்னணி என்ன?

பாகிஸ்தானில் நேற்று மாலை தொழிலாளர்கள் மாநாட்டை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் மனித குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

Written by - Sudharsan G | Last Updated : Jul 31, 2023, 07:54 AM IST
  • இச்சம்பவம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்துள்ளது.
  • காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  • அம்மாநாட்டில் சுமார் 400 பேர் கலந்துகொண்டதாக தகவல்.
பாகிஸ்தானில் மனித குண்டுவெடிப்பு தாக்குதல்... 42 பேர் பலி - பின்னணி என்ன? title=

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மனித குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது, மேலும் குறைந்தது 111 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜாரின் கர் தெஹ்சிலில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்ல் (JUI-F) தொழிலாளர்கள் மாநாட்டைக் குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மீட்புக் குழுக்கள் மற்றும் காவல்துறை பிரிவுகள் விரைவாக அப்பகுதியில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லத் தொடங்கினர். 

குண்டுவெடிப்புக்குப் பிறகு, NADRA தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஷண்டே மோரில் நடந்த JUI-F தொழிலாளர்கள் மாநாட்டில் சுமார் 400 பேர் கலந்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பகுதி சட்ட அமலாக்கத்தால் தடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் JUI-F முன்னணி தலைவர்கள் ஹமிதுல்லா மற்றும் கர் அமீர் மௌலானா ஜியாவுல்லா ஜான் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க | Worlds biggest cemetery: அமைதியின் பள்ளத்தாக்கு மயானம்! உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு

JUI-F தலைவர் மாநாட்டில் உரையாற்றும் போது மாலை 4 மணியளவில் இந்த மரண சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜிபி) அக்தர் ஹயாத் கான் கூறுகையில், குண்டுவெடிப்பு ஒரு தற்கொலை தாக்குதல் என்றும், குண்டுவெடிப்பில் 10 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து விசாரணைக் குழு ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், காயமடைந்தவர்கள் டைமர்கரா மற்றும் பெஷாவருக்கு மாற்றப்படுவதாக மாவட்ட அவசர அதிகாரி தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண பிரதமர் ஷெஹ்பாஸ் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது. இதற்கிடையில்,  பெஷாவரில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனை, உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் பாதுகாப்புப் படைகள், பிற சட்ட அமலாக்க அமைப்புகளின் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.

JUI-F தலைவர் Fazl இந்த கொடூரமான சம்பவம் குறித்து விசாரணை கோரியுள்ளார். மேலும், கட்சித் தொண்டர்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதேசமயம், பஞ்சாப் காபந்து முதல்வர் மொஹ்சின் நக்வி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுபவர்கள் மனிதர்கள் என்று அழைக்கத் தகுதியற்றவர்கள் என்றும் சாடினார்.

ஜமாத்-இ-இஸ்லாமி அமீர் சிராஜுல் ஹக்கும் இந்த குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, நாட்டில் குழப்பத்தை பரப்பும் நோக்கில் இது நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஹக் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | உலகில் பஞ்ச அபாயம், தானிய பற்றாக்குறை அதிகரிக்கும்! நேட்டோவுக்கு ரஷ்யாவின் சவால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News