Quaternary Twins: அமெரிக்காவின் ‘மரபணு’ சகோதரர்கள்; வியக்கும் விஞ்ஞானிகள்!

அமெரிக்காவில், வெவ்வேறு பெற்றோர்களுக்கு பிறந்த, இருவருக்கு டிஎன்ஏ ஒரே மாதிரியாக இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 27, 2022, 05:24 PM IST
  • DNA என்பது டி-ஆக்ஸிரிபோநியூக்ளியிக் அமிலம்.
  • இரட்டையர்கள் அல்லது ஒரே பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் என்றாலும் கூட, டிஎன்ஏ முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
  • அறிவியல் மொழியில், குவாட்டர்னரி ட்வின்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.
Quaternary Twins: அமெரிக்காவின் ‘மரபணு’ சகோதரர்கள்; வியக்கும் விஞ்ஞானிகள்! title=

DNA என அறியப்படும் டி-ஆக்ஸிரிபோநியூக்ளியிக் அமிலம் என்பது உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை உத்தரவிடும் மரபு ரீதியான தகவலை முறைப்படுத்தும் மூலக்கூறு ஆகும். உயிருள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் DNA இருக்கும். பொதுவாக ஒவ்வொரு மனிதனின் டிஎன்ஏ வேறுவேறாக இருக்கும். இரட்டையர்கள் அல்லது ஒரே பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் என்றாலும் கூட, டிஎன்ஏ முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சில சமயங்களில் விஞ்ஞானிகளையே குழப்ப கூடிய நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவில், கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஷயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெவ்வேறு பெற்றோர்களுக்கு பிறந்த, இருவருக்கு டிஎன்ஏ ஒரே மாதிரியாக இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. விஞ்ஞானிகள் அவர்களை 'மரபணு சகோதரர்கள்' என்கிறார்கள். அதே நேரத்தில், அறிவியல் மொழியில், குவாட்டர்னரி ட்வின்ஸ் (Quaternary Twins) என்று அழைக்கப்படுகின்றனர்.

பிரைனா மற்றும் பிரிட்டானி டீன் ஆகியோர் அமெரிக்காவின் வர்ஜீனியா நகரத்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள். அவர்களுடைய வயது 35. அவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு இரட்டை சகோதரர்களை மணந்தார். அவரது கணவர் ஜோஷ் மற்றும் ஜெர்மி சேயர்ஸ் ஆகியோருக்கு 37 வயது. திருமணத்திற்குப் பிறகு இரு தம்பதியினருக்கும் ஒரு மகன் பிறந்தான். ஒருவரின் பெயர் ஜாக், மற்றொன்று ஜெட். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு வயது இருக்கும். அவர்களின் பிறந்தது, மூன்று மாதங்கள் இடைவெளி இருந்தாலும், மரபணு ரீதியாக, ஒரே டிஎன்ஏ கொண்டுள்ளது விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே தாய் தந்தைக்கு பிறக்காத இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு, ஒரே டிஎன்ஏ இருப்பது மிகவும் அரிது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் 300 குடும்பங்களில் மட்டுமே DNA ஒரே மாதிரியாக இருக்கும் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. ஆனால் இதிலும் இருவரின் டிஎன்ஏவும் முழுமையாக ஒரே மாதிரி இருக்காது. அறிவியல் மொழியில், இத்தகைய நிகழ்வுகள் குவாட்டர்னரி ட்வின்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். 

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

இரண்டு சகோதரிகளும் நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக விரும்பினோம், ஆனால் அது நடக்கவில்லை என்று கூறினர். இருந்தாலும் எங்கள் இருவரின் குழந்தைகளின் டிஎன்ஏவும் ஒரே மாதிரியாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இத்தகைய வழக்குகள் அதாவது குவாட்டர்னரி இரட்டையர்கள் பிறப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். பொதுவாக ஒன்பது மாதங்களுக்கும் குறைவான இடைவெளியில் பிறக்கும் மற்றும் பெற்றோர் இரட்டையர்களாக இருக்கும் குழந்தைகள் குவாட்டர்னரி ட்வின்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. அவர்களின் ஜீன்ஸ் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். இதனால்தான் அவர்கள் மரபணு ரீதியாக நெருங்கிய சகோதர சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News