பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்... யார் அந்த ரமேஷ் சிங் அரோரா?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின், முதல் பெண் முதலமைச்சர் ஆக, மரியம் நவாஸ்ர தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், சீக்கிய சமூகத்தை சேர்ந்த ரமேஷ் சிங் அரோரா, அமைச்சராகிய முதல் சீக்கியர் என்ற பெருமையை பெறுகிறார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 7, 2024, 06:57 PM IST
  • இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானிலேயே இருக்க முடிவு செய்த குடும்பம்
  • சிறுபான்மையினர் இலாகா பொறுப்பை ஏற்றுள்ள அரோரா.
  • பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் செயலாளர்
பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்... யார் அந்த ரமேஷ் சிங் அரோரா? title=

பாகிஸ்தானின் 24-வது பிரதம மந்திரி ஆக ஷாபா ஷெரீஃப், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டு, திங்கட்கிழமை அன்று பதவியேற்றார். பாகிஸ்தானில் நடந்த தேர்தலில், ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இம்ரான் கானின் ஆதரவாளர்கள், ராணுவத்தின் அடக்கு முறையையும் மீறி சுயேச்சையாக போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதை எடுத்து, அங்கே சுமார் மூன்று வார காலங்களுக்கு அரசியல் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் குழப்பத்திற்கு முடிவு ஏற்படும் வகையில், போதிய பெரும்பான்மையை பெறாத நிலையிலும், அதிக இடங்களை பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது தொடர்ந்து,.சபாஷ்ரீப் பிரதமராக பதவியேற்றார்.

சீக்கிய சமூகத்தை சேர்ந்த ரமேஷ் சிங் அரோரா

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின், முதல் பெண் முதலமைச்சர் ஆக, மரியம் நவாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், சீக்கிய சமூகத்தை சேர்ந்த ரமேஷ் சிங் அரோரா, அமைச்சராகிய முதல் சீக்கியர் என்ற பெருமையை பெறுகிறார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) சட்டமன்ற உறுப்பினரான அரோரா, தனது மூன்றாவது முறையாக மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவர் அமைச்சரைப் பெறுவது இதுவே முதல் முறை.

சிறுபான்மையினர் இலாகா பொறுப்பை ஏற்றுள்ள அரோரா 

அரோரா நரோவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்,  ரமேஷ் அரோராவிற்கு, பஞ்சாப் மாகாண அமைச்சரவையில் சிறுபான்மையினர் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் மற்றொரு மத சிறுபான்மை உறுப்பினரான கலீல் தாஹிர் சிந்துவும் அரோராவுடன் பஞ்சாப் மாகாண அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிந்துவுக்கு மனித உரிமைகள் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நிலவில் அணு உலையை நிறுவ திட்டமிடும் ரஷ்யா சீனா..!!

பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் செயலாளர்

நான்கானா சாஹிப்பில் பிறந்த அரோரா, லாகூரில் உள்ள அரசு கல்லூரி பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவு மற்றும் SME நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரது குடும்பம் கர்தார்பூரில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலங்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை கவனித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் (PSGPC) பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். தேசிய நல்லிணக்க அமைச்சகத்திலும் உறுப்பினராக இருந்தார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானிலேயே இருக்க முடிவு செய்த குடும்பம்

1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, ​பாகிஸ்தானில் இருக்க முடிவு செய்த பல சீக்கிய மற்றும் இந்து குடும்பங்களைப் போல இந்தியாவுக்குச் செல்வதற்குப் பதிலாக, பாகிஸ்தானிலே இருக்க அவரது குடும்பம் தேர்வு செய்ததாக அரோரா கூறினார். எனது தாத்தா தனது அன்பு நண்பரின் வற்புறுத்தலின் பேரில் பிரிவினையின் போது பாகிஸ்தானிலேயே இருக்க முடிவு செய்தார் என ரமேஷ் சிங் அரோரா குறிப்பிட்டுள்ளார்.

சீக்கிய எம்பி ஒருவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட ஒரே கட்சி

1970 முதல், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் பிரிவு (PML-N), பாகிஸ்தான் மக்கள் கட்சி, இஸ்லாமிய ஜம்ஹூரி இத்தேஹாத், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் (PTI) போன்ற பல்வேறு அரசியல் கட்சிகள், தனியாகவும் அல்லது கூட்டணி சேர்ந்தும் அரசுகளை அமைத்துள்ளன. இருப்பினும், முதன் முதலாக சீக்கிய எம்பி ஒருவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட ஒரே கட்சியாக PML-N தனித்து நிற்கிறது.

மேலும் படிக்க | போர்க் கைதிகளுக்கு பாலியல் வன்கொடுமை! நாயை விட்டு கடிக்க வைத்த இஸ்ரேல்! UNRWA புகார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News